திருச்சி மாவட்ட விசுவ ஹிந்து பரிசத் சார்பில் 5 ஆண்டுகளாக திருச்சி காவேரி தாய்க்கு ஆடிப்பெருக்கு அன்று சீர்வரிசை கொடுக்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி ஆடிப்பெருக்கான நேற்று காவிரி தாய்க்கு சீர் வழங்கும் நிகழ்ச்சி அம்மா மண்டபம் ஓடத்துறை அருகே உள்ள தென்கரை விசுவ ஹிந்து பரிசத் அலுவலகம் அருகே வடகரை என மூன்று இடங்களில் நடந்தது
இந்த நிகழ்வில் மாவட்ட தலைவர் சுதாகர் தலைமை வகித்தார்.செயலாளர் சீனிவாசன் முன்னிலை வகித்தார்.
மாநில அமைப்பு செயலாளர் பாலாஜி உள்ளிட்டர் கலந்து கொண்டனர்.முன்னதாக சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள அன்னதான சத்திரத்தில் இருந்து புறப்பட்ட ஊர்வலம் ஓடத்துறை தென்கரையில் முடிந்தது.
பின்னர் மங்களப் பொருட்கள் அடங்க சீர்வரிசை கொடுக்கப்பட்டது .மஞ்சள், குங்குமம் சந்தனம், நவதானியங்கள், பட்டுப் புடவை, வளையல் உள்ளிட்ட ஆபரணங்கள் மற்றும் அரிசி, காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை காவிரித் தாய்க்கு சமர்ப்பித்தனர்.
மாவட்டத் துணைத் தலைவர்கள் கோபால், ஜெயந்தி, மாற்று சக்தி பொறுப்பாளர் சித்ரா உள்ளிட்ட நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்
0 Comments