சென்னையில் விட்ஃபா சர்வதேச உலக தமிழ் திரைப்பட அமைப்பின் உயர்பீட குழுவின் நிர்வாக குழு உறுப்பினர்கள் கலந்தாய்வு கூட்டம் அம்பத்தூர் அலுவலகத்தில் விட்ஃபா அமைப்பின் நிறுவனர் தலைவரும் திரைப்பட தயாரிப்பாளரும் இயக்குனருமான ஏ. ஆர்.எம்.ரஸீம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் Dr. சுப்பையா பிள்ளை அவர்களின் மிராஸ் கிரியேஷன்ஸ் தயாரிப்பில் இயக்குனர் ஏ. ஆர்.எம்.ரஸீம் அவர்கள் இயக்கத்தில் இறுதிகட்ட படப்பிடிப்பில் உள்ள மீன் முள்ளு திரைப்படத்தின் பணிகள் குறித்தும் ராம்ஜி கிரியேஷன்ஸ் R. மகேந்திரன் அவர்கள் தயாரிப்பில் இயக்குனர் ஏ. ஆர்.எம்.ரஸீம் அவர்கள் இயக்கத்தில் உருவாகியுள்ள கொரோனா வில் ஒரு குற்றவியல் திரைப்படத்தினை விரைவில் வெளியிடுவது குறித்தும் விட்ஃபா எதிர்கால திட்டங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் விட்ஃபா அமைப்பின் நிர்வாகிகள் துணைத்தலைவர்கள் வழக்கறிஞர் பி. ரமேஷ் பாபு பேராசிரியர் ஜி.சந்திரன் என். மாரியப்பன் தலைவரின் ஆலோசகர்கள் கே. ஜே. பூபதி Dr. என்.அனுசியா நவரத்தினம் வழக்கறிஞர் எஸ்.ராமசந்திரன் சட்ட ஆலோசகர் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ராஜ்குமார் பொருளாளர் டி. ஆனந்தராஜ் பொதுச் செயலாளரும் தேசிய மற்றும் மாநில விருதுகள் பெற்ற நடிகரும் இயக்குனருமான ஆர்.ஏ.தாமஸ்
இணைச்செயலாளர்கள் இ. யாபேஷ் இசையமைப்பாளர் யஷ்வந்த் ஒருங்கிணைப்பாளர் பாலசுப்ரமணியன் ரோசினாபானு மேஜிசியன் மாரிமுத்து மற்றும் திரளான உயர்பீட நிர்வாக குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் கூட்டத்தின் முடிவில் சமீபத்தில் நடைபெற்ற விட்ஃபா அமைப்பின் புத்தக வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்பித்தது தங்களது ஆதரவை விட்ஃபா அமைப்பிற்கு தெரிவித்த பிரபல திரைப்பட இசையமைப்பாளரும் இயக்குனருமான கங்கை அமரன் பிரபல திரைப்பட இயக்குனர் பேரரசு அவர்களுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது
0 Comments