// NEWS UPDATE *** காவிரி பாசன மாவட்டங்களில் நெல் கொள்முதல் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்; மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ***************** தமிழ்நாட்டில் வாக்காளர் சிறப்பு திருத்தம் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாக தகவல் *** திருச்சி மாவட்டம் துறையூர் அருகே லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் இரண்டு பேர் பலி.

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் இரண்டு பேர் பலி.

 திருச்சி மாவட்டம் துறையூர்  அடுத்த முருகர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சரண்ராஜ், வயது 23 விக்கி என்ற விக்னேஷ் வயது 20 இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் துறையூருக்கு சென்றுள்ளனர்.

அப்போது துறையூரில் இருந்து ஆத்தூரை நோக்கி மோட்டார் சைக்கிளுக்கு முன்பு டிப்பர் லாரியும் சென்றது இந்த நிலையில் லாரியை சரண்ராஜ் முந்தி செல்ல முயன்ற போது  கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் லாரியில் எதிர்பாராதமாக மோதியதில் சரண்ராஜ் விக்னேஷ் ஆகியோர் தூக்கி வீசப்பட்டனர் .

இதில் சம்பவ இடத்தில் விக்னேஷ் என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார், சரண்ராஜ் பலத்த காயத்துடன் ஆம்புலன்ஸ் மூலம் துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர் ஆனால் அவர்மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார் இந்த சம்பவம் தொடர்பாக துறையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

Post a Comment

0 Comments