// NEWS UPDATE *** கேரளாவில் மூளையை தின்னும் அழிவு வைரஸ் - கொடூர தாக்குதலால் 2 பேர் பலி *** "ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர் இழப்புகளால் ஆழ்ந்த வருத்தம் அடைந்தேன் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து மனிதாபிமான உதவிகள், நிவாரணங்களை வழங்க இந்தியா தயாராக உள்ளது" - பிரதமர் மோடி *** திருச்சி அருகே ஆவணி மாத பௌர்ணமி மற்றும் சந்திர கிரகனத்தை முன்னிட்டு ஸ்ரீ தக்ஷிண காளியம்மன் கோவிலில் சந்திர கிரகண தோஷ நிவர்த்தி பூஜை நடைப்பெற்றது.

திருச்சி அருகே ஆவணி மாத பௌர்ணமி மற்றும் சந்திர கிரகனத்தை முன்னிட்டு ஸ்ரீ தக்ஷிண காளியம்மன் கோவிலில் சந்திர கிரகண தோஷ நிவர்த்தி பூஜை நடைப்பெற்றது.

திருச்சி மாவட்டம் பெட்டவாய்த்தலை அருகே உள்ள நங்கவரம் தென்கடை குறிச்சி பகுதியில் ஸ்ரீ தக்ஷிண காளியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் பெண்கள் வேண்டியதை  நினைத்து அம்மனுக்கு விரதம் இருந்து விளக்கேற்றி அபிஷேகம் செய்வதால் வேண்டியது நிறைவேறும் என்பது ஐதீகம் .

அந்த வகையில் திருச்சி மற்றும் கரூரை சுற்றியுள்ள பலரும் அம்மனை தரிசனம் செய்து வருகின்றனர் .இந்நிலையில் இன்று ஆவணி மாத பௌர்ணமி மற்றும் சந்திர கிரகணம் என்பதால் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் மற்றும் தோஷ நிவர்த்தி பூஜை உலக மக்கள் நலன் வேண்டியும் நோய் நொடி இல்லாத பொருளாதாரத்தில் நல் நிலை அடைந்திடவும் ,விவசாயம் செழித்திடவும் யாகம் சிறப்பாக நடைபெற்றது


பூஜைக்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தக்ஷிண காளி சித்தர் பீடத்தின் பீடாதிபதி  தவத்திரு.அறம்மிகு அடிகளார் செய்திருந்தார் இந்த பூஜையில் 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர் .



Post a Comment

0 Comments