தமிழகத்தில் தனியார் பல்கலைக்கழக சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக, மாநிலம் முழுவதும் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் இன்று கருப்பு சட்டை அணிந்து கடும் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்
கடந்த 17 அக்டோபர் 2025 அன்று தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட “தனியார் பல்கலைக்கழக சட்டம், 2019” திருத்த மசோதா,ஏழை மற்றும் நடுத்தர வர்க்க மாணவர்களின் உயர் கல்வி வாய்ப்பை பறிக்கும் தன்மையுடனும் தனியார் முதலாளிகளுக்கு ஆதரவானச் சட்டம் எனவும் அமைந்துள்ளதாக சங்கம் குற்றம்சாட்டியுள்ளது. உயர்கல்வி அனைவருக்கும் சம வாய்ப்புடன் கிடைக்க வேண்டிய சூழலை பாதிக்கும் இந்த மசோதா, சமூக நீதி என்ற கல்வியின் அடிப்படை தத்துவத்தை பாதிக்கும் அபாயம் கொண்டதாக ஆசிரியர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இன்று தமிழகத்தின் பல கல்லூரிகளில் ஒருங்கிணைந்த வடிவில், கீழ்க்கண்ட மூன்று நிலைப் போராட்டங்கள் நடைபெற்றன
(1) கருப்பு ஆடை அணிந்து பணி செய்தல்
(2) வாயிற் முழக்கப் போராட்டம்
மேலும் அடுத்தடுத்த வேலை நாட்களிலும் இந்தப் போராட்டம் தொடரும் என்று சங்கம் அறிவித்துள்ளது.
இதன் தொடர்ச்சியாக, திருச்சி தேசிய கல்லூரி நுழைவாயிலில் பல்கலைக்கழக ஆசிரியர் சங்க பேராசிரியர்கள் ஒன்று கூடி வாயிற் முழக்கப் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு மாநிலப் பொதுச் செயலாளர் ராஜா தலைமையேற்றார். மண்டல செயலாளர் சுந்தரவேல் முன்னிலை வகித்தார். நிகழ்வில் 25 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
தனியார் பல்கலை மசோதா திரும்பப் பெறப்படுக என்று முழக்கங்களை எழுப்பி, அரசு உடனடியாக தனியார் பல்கலைக்கழக திருத்த சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தினர்.




0 Comments