// NEWS UPDATE *** காவிரி பாசன மாவட்டங்களில் நெல் கொள்முதல் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்; மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ***************** தமிழ்நாட்டில் வாக்காளர் சிறப்பு திருத்தம் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாக தகவல் *** பாஜக மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி செய்தியாளர் சந்திப்பு

பாஜக மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி செய்தியாளர் சந்திப்பு

பாஜக மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி ஹைதராபாத்தில் இருந்து விமானம் மூலம் கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ப்பதற்காக திருச்சி வந்தார் 

பாஜக மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர் பீகார் தேர்தலின் போது பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டில் பீகாரை சேர்ந்தவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதாக பேசியதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் அவரை விமர்சித்திருப்பது கண்டனத்துக்குரியது.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர் கெட்டு இருப்பதாகவும் அனைத்து துறைகளிலும் ஊழல் மற்றும் முறைகேடுகளில் திமுக ஈடுபட்டிருப்பதை மறைப்பதற்கும் அதை திசை திருப்புவதற்கும் தமிழக முதல்வர் மற்றும் அவருடைய மகன் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் ஈடுபட்டு வருகின்றனர்.

 பிரதமர் நரேந்திர மோடி சொன்னது போல் தமிழகத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பீகாரை சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தாக்கப்பட்டது உண்மைதான் அதனால்தான் அதைக் கூடிட்டு பிரதமர் நரேந்திர மோடி அது தேர்தல் பிரச்சாரத்தில் அதை குறிப்பிட்டு இருந்தார். மேலும் பிரதமர் நரேந்திர மோடி தமிழுக்கும் தமிழ்நாட்டிற்கும் அதிக முக்கியத்துவத்தை தருகிறார்.

காசி தமிழ்ச் சங்கம், சௌராஷ்டிரா தமிழ் சங்கம் ஆகிய நிகழ்வுகளை நடத்தி தமிழுக்கு பெருமை சேர்த்திருக்கிறார்.

ஆனால் முதல்வர் ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடி மீது வெறுப்புணர்வை தூண்டுகிறார். அது கண்டிக்கத்தக்கது இதை தமிழக மக்கள் ஒரு நாளும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

மேலும் SIR எனப்படும் தீவிரவாக்கு விவகாரத்தில் அனைத்து கட்சி கூட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் நடத்துவது தேவையற்ற ஒன்று இந்த எஸ் ஐ ஆர் எனப்படும் செய்முறையினால் போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டு உண்மையான வாக்காளர்கள் தங்களது வாக்குரிமையை நிலை நாட்டுவதற்காக இது கொண்டுவரப்பட்டிருக்கிறது.

Post a Comment

0 Comments