ஜமா அத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பு சார்பில் தேசிய அளவிலான முன்மாதிரி அண்டை வீட்டார் முன்மாதிரி சமூகம் என்ற தலைப்பில் விழிப்புணர்வு பரப்புரை நடைபெறுகிறது. இந்த பரப்புரை இன்று முதல் (21 - ந் தேதி) தொடங்கி 30-ந் தேதி வரை நடக்கிறது.இது தொடர்பாக இன்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பரப்புரை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் கமாலுதீன் செய்தியாளர்களை சந்தித்து பேசியது...
ஜமா அத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பானது கடந்த 75 ஆண்டுகளுக்கு மேலாக தேசிய அளவில் பல்வேறு சமூக சேவைகள் சமய நல்லிணக்க பணிகளை முன்னெடுத்து வருகிறது ஒவ்வொரு கால சூழலுக்கு ஏற்ப பல்வேறு மையக் கருத்தில் பரப்புரை நடத்தி மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றோம் அந்த வகையில் நாளை முதல் முன்மாதிரி அண்டை வீட்டார் முன்மாதிரி சமூகம் என்ற மையக் கருத்தில் விழிப்புணர்வு பரப்புரை இயக்கத்தை நடத்த உள்ளோம் மனித மாண்புகளை மீட்டெடுக்கும் வகையில் அண்டை வீட்டாருடன் ஆன உறவையும் அன்பையும் மீட்டெடுக்கும் வகையில் இந்த பரப்புரை மேற்கொள்ளப்படுகிறது.
வெறுப்பை விதைத்து மதரீதியான பிளவுகளை வேறுபாடுகளை ஏற்படுத்தி வரும் இன்றைய கால சூழலில் அன்பால் நாம் இணைவதற்கும்,வெறுப்பை வேரறுப்பதற்கும் இந்த பரப்புரை துணை நிற்கும். இது ஒரு முன்மாதிரி சமுதாயத்தை கட்டமைக்க உதவும் என உறுதியாக நம்புகிறோம். திருச்சியில் 40 இடங்களில் இந்த பரப்புரை மேற்கொள்ளப்பட உள்ளது.
இந்த பரப்புரையின் போது கலந்துரையாடல்கள் பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கான சிறப்பு நிகழ்ச்சிகள் தெருக்களில் தூய்மை பணியை மேற்கொள்வது போக்குவரத்து நெறிமுறைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல் போட்டிகளை நடத்த உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.






0 Comments