திருச்சி ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆஸ்ரமத்தின் 12வது ஜீயர்சுவாமி ஸ்ரீ வராக மஹா தேசிகன் சுவாமிகள் இன்று ஸ்ரீரங்கத்திற்கு எழுந்தருளினார். இன்றுமுதல் 4நாட்கள் பக்தர்களுக்கு அருளாசி செய்ய உள்ள ஸ்ரீவராக மஹாதேசிகன் சுவாமிகள் ஸ்ரீரங்கம் ரெங்கநாதரை தரிசனம் செய்தபின்னர் இன்றுமாலை ஸ்ரீரங்கம் ஆண்டவன் கல்லூரிக்கு வருகைதந்தார்.
அங்கு ஹயக்கிரீவர் சன்னதியில் வழிபாடு மேற்கொண்டு பின்னர் கல்லூரி பேராசிரியர்கள், பட்டமேற்படிப்பு மாணவர்கள் மற்றும் ஊழியர்கள், பொதுமக்களுக்கு அருளாசி வழங்கினார். 24ம் தேதிவரை ஆண்டவன் கல்லூரியில் முகாமிட்டு பொதுமக்களுக்கு ஆசீர்வாதம் வழங்க உள்ளார். ஏராளமானோர் வருகைதந்து ஆண்டவன் ஜீயர் சுவாமிகளிடம் ஆசிபெற்றுச்சென்றனர்.
தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஸ்ரீ வராக மஹா தேசிக சுவாமிகள் எம்பெருமானின் பத்து அவதாரத்தின் மகிமையை அர்ச்சாவதாரத்தில் பார்க்கிறோம், ராமபிரானே வெளிப்பட்ட இந்த ஸ்ரீரங்கம் சேத்திரத்திற்கு வருவது மகிழ்ச்சி அளிக்கிறது, எவர் ஒருவராலும் திருட முடியாத ஒரு சொத்து கல்வி அதனை ஆண்டவன் ஆசிரமத்தின் சார்பில் ஏழை எளிய மானக்கர்களுக்கு சிறப்பாக வழங்கமுடிவதை எண்ணி பெருமிதம் கொள்வதாக தெரிவித்தார்.




0 Comments