திருச்சி NSB ரோடு,தெப்பக்குளம் ஆர்ச் உள்பகுதி உள்ளிட்ட பகுதிகளில் தரைக்கடை அமைத்து வியாபாரம் செய்து வருபவர்களை அந்த இடத்திலிருந்து அப்புறப்படுத்த கூடாது மாற்று இடம் வழங்கினால் மக்கள் நடமாட்டம் உள்ள முக்கிய இடத்தில் வழங்க வேண்டும் என வலியுறுத்தி மனிதநேய அனைத்து வர்த்தக நலச் சங்கத்தினர் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்
திருச்சி என்எஸ்பி ரோடு, சிங்காரத்தோப்பு, தெப்பக்குளம் மற்றும் நந்தி கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக தரைக்கடை அமைத்து தங்களது வாழ்வாதாரத்தை சற்று காத்து வரும் தரைக்கடை வியாபாரிகளை பெரிய முதலாளிகள் மற்றும் ஆளுங்கட்சியினர் நிர்பந்தத்தால் அங்கிருந்து அப்புறப்படுத்தி வேறு இடத்தில் அமர்த்த மாநகராட்சி நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.
ஆளுங்கட்சி மற்றும் பெரிய முதலாளிகள், வெண்டிங் கமிட்டியினர் நிர்பந்தத்திற்கு இணங்க செயல்படாமல், தரைக்கடை வியாபாரிகளுக்கு உரிய மாற்று இடம் வழங்கிடவலியுறுத்தி மனிதநேய அனைத்து வர்த்தகர்கள் நலச்சங்கம் சார்பில் மாவட்ட தலைவர் கபீர் அகமது தலைமையில் ஆட்சியர் அலுவலகத்தில் நூற்றுக்கணக்கான தரைக்கடை வியாபாரிகள் மனு அளித்தனர்.




0 Comments