// NEWS UPDATE *** காவிரி பாசன மாவட்டங்களில் நெல் கொள்முதல் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்; மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ***************** தமிழ்நாட்டில் வாக்காளர் சிறப்பு திருத்தம் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாக தகவல் *** நேரடி வர்த்தகத்தை வரைமுறைப்படுத்தும் வகையில் தமிழ்நாட்டில் தனி சட்டம் இயற்றி, வாரியம் அமைக்க வேண்டும் - நெட்வொர்க்கர்ஸ் வெல்பர் அசோசியேசன் திருச்சியில் கோரிக்கை!

நேரடி வர்த்தகத்தை வரைமுறைப்படுத்தும் வகையில் தமிழ்நாட்டில் தனி சட்டம் இயற்றி, வாரியம் அமைக்க வேண்டும் - நெட்வொர்க்கர்ஸ் வெல்பர் அசோசியேசன் திருச்சியில் கோரிக்கை!

நெட்வொர்க் வெல்பர் அசோசியேசன் மாநில மாநாடு திருச்சியில் வருகிற 8-ம் தேதி நிறுவன தலைவர் மனோகரன் தலைமையில் நடைபெற உள்ளது. இது குறித்த செய்தியாளர் சந்திப்பு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட  உயர்நிலைக் குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,...

நேரடி வர்த்தகத்தை வரைமுறைப்படுத்தும் வகையில் கேரளாவை போல் சட்டம் இயற்றி தனி வாரியம் அமைக்கப்பட வேண்டும். அதன் மூலம் மக்களை ஏமாற்றும் போலி நிதி நிறுவனங்களிடமிருந்து மக்களை காக்க வேண்டும். 


நிதி நிறுவனங்களிடம் ஏமாற்றப்பட்ட மக்களுக்கு நியாயம் கிடைக்க முன்னாள் நீதிபதி தலைமையில் ஒரு ஆணையம் அமைத்து குறிப்பிட்ட காலத்திற்குள் நிவாரணம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். நெட்வொர்க் துறையில் ஈடுபட்டுள்ள லட்சக்கணக்கானோர் பயன்பெறும் வகையில் நல வாரியம் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் வருகிற 8 - ஆம் தேதி (சனிக்கிழமை) மாநாடு நடைபெற உள்ளது என தெரிவித்தார்.

Post a Comment

0 Comments