தமிழக பாரதிய ஜனதா கட்சியின் பொருளாதாரப் பிரிவு திருச்சி கோட்ட மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை மற்றும் அறிமுக கூட்டம் திருச்சி மாவட்ட பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பொருளாதார பிரிவு மாநில தலைவர் காயத்ரி தலைமை வகித்தார். மாநில செயலாளர் ரிகன்யா அறிமுக உரையாற்றினார்.
ஜிஎஸ்டியால் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்கள் குறித்து தெருமுனைப் பிரச்சாரம் மற்றும் பொதுக்கூட்டங்கள் நடத்துவது குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. அனைத்து நலத்திட்டங்களும் பொருளாதாரத்தை மையமாக வைத்தே செயல்படுகிறது இது போன்ற திட்டங்கள் மக்களின் வாழ்க்கையில் எப்படி யான பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது, ஜிஎஸ்டி மற்றும் கடந்த 11 ஆண்டுகளில் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்கள் குறித்து மக்கள் மத்தியில் எடுத்துக் கூறப்பட உள்ளதாகவும், கடந்த 75 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வரி குறைப்பு செய்து தூய்மை இயக்கம் முதல் இன்றைய திட்டம் வரை மிகப் பெரிய அளவில் பொருளாதார மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ஒவ்வொரு வீட்டிலும் ஒரு பயனாளி மத்திய அரசின் திட்டத்தால் பயன்பட்டு இருப்பார்கள்.இதுபோன்ற தகவல்களை வீடு தோறும் கொண்டு சேர்ப்பதே எங்களின் நோக்கம். மத்திய அரசின் அனைத்து நிதிகளும் வந்துவிட்டதாக அதிகாரிகள் கூறும்போது அரசியலுக்காக உதயநிதி அவற்றை குறை கூறுகிறார்.
ஜிஎஸ்டி குறைப்பால் பெரிய கடைகளில் ஏற்பட்டுள்ள விலை மாற்றம் போதிய விழிப்புணர்வு இல்லாததால் சிறிய கடைகளில் விலை குறைப்பு செய்யவில்லை. திமுக தேர்தல் அறிக்கையில் கூறியவாறு சுங்கச்சாவடி இல்லாத தமிழகத்தை உருவாக்குவது, பெட்ரோல் டீசல் விலை குறைப்பு கேஸ் விலை குறைப்பு என எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. தனிமனிதன் பலனடையக்கூடிய திட்டங்கள் மூலம் பொருளாதாரத்தில் மாற்றத்தை கொண்டு வர மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது என பொருளாதார பிரிவு மாநில தலைவர் காயத்ரி பேட்டியளித்தார்.




0 Comments