கோவை கல்லூரி மாணவிக்கு நிகழ்ந்த கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு எதிராக தமிழகம் முழுவதும் பாஜக மகளிரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்புக்கு உரிய சட்டம் இயற்ற வலியுறுத்தியும், பெண்களுக்கு பாதுகாப்பற்ற மாநிலமாக தமிழகத்தை மாற்றிய திமுக அரசே மக்களிடம் மன்னிப்புகேள் என்பதனை வலியுறுத்தி பாரதிய ஜனதாகட்சி மகளிர் அணி சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் பாஜக மகளிர் அணி மாவட்டத் தலைவர் மலர்கொடி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று மாலை நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்ட பாஜக மகளிர் அணியை சேர்ந்த பெண்கள் பங்கேற்று திமுக அரசுக்கு எதிராக கண்டனம் முழக்கங்கள் எழுப்பினர்.இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.




0 Comments