மக்கள் நீதி மய்யத்தின் நிறுவன தலைவர் கமலஹாசன் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சியில் அன்னதானம் வழங்கப்பட்டது.
மக்கள் நீதி மய்யத்தின் நிறுவன தலைவர், உலக நாயகன் கமலஹாசன் எம் பி பிறந்தநாள் விழா நவம்பர் 7 இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மக்கள் நீதி மய்யம் சார்பில் தொண்டர்கள் கமலஹாசன் பிறந்த நாளை பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்து கொண்டாடி வருகின்றனர்.
அந்த வகையில் மக்கள் நீதி மய்யம் திருச்சி மேற்கு மாவட்டம் சார்பாக இன்று பீமநகர், 51-வது வார்டு பகுதியில் அன்னதானம் வழங்கப்பட்டது.
மநீம மாவட்ட செயலாளர் எஸ்.பி.எஸ்.சதீஷ்குமார், நகரச் செயலாளர் பி சீனிவாசன் பீமநகர் பாதுஷா, கண்ணன், சக்திவேல், ரமேஷ் செல்வராஜ் பேக்கரி ரமேஷ் ஆகியோர் கலந்துகொண்டு அன்னதானம் வழங்கினர்.



0 Comments