இந்திய பள்ளிகள் விளையாட்டு குழுமம் (SGFI) நடத்தும் தேசிய அளவிலான பள்ளி மாணவ மாணவிகளுக்கான கையுந்துபந்து போட்டி உத்தரபிரதேச மாநிலத்தில் நவம்பர் 11 முதல் 15 வரை நடைபெறுகிறது.
போட்டியில் கலந்து கொள்ளும் தமிழ்நாடு பள்ளி மாணவ மாணவியர்கள் அணியினரை தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் அன்பில் அறக்கட்டளை சார்பாக சீருடைகளை வழங்கி வெற்றி பெற வாழ்த்தி அனுப்பி வைத்தார்கள்.
இந்நிகழ்வில் திருச்சி மாவட்ட கையுந்துபந்து கழக செயலாளர் கோவிந்தராஜன் பொருளாளர் சிவாஜி மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் சரோஜினி ஆகியோர் கலந்து கொண்டனர்.






0 Comments