உலக நீரிழிவு நோய் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருச்சியில் ஐ பவுண்டேஷன் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது
ஆண்டுதோறும் உலக நீரிழிவு நோய் தினம் நவம்பர் 14ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. அதனை முன்னிட்டு பல்வேறு தரப்பினரும் நீரிழிவு நோய் குறித்து பெரியவர்கள் முதல் மாணவர்கள் வரை அனைவரிடத்திலும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்
திருச்சியில் உலக சர்க்கரை நோய் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில் மாணவிகள் மற்றும் மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.ஐ பவுண்டேஷன் கண் மருத்துவமனை சார்பில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு பேரணியில் 200க்கும் மேற்பட்ட மாணவிகள் மற்றும் மருத்துவர்கள் இதில் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு நீரழிவு நோயினால் ஏற்படும் பாதிப்பை பற்றி விளக்கினர். இந்த விழிப்புணர்வு பேரணியை ஐ பவுண்டேஷன் தலைவர் திருமதி அர்ச்சனா தெரசா கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்
மேலும் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு கண் விழித்திரை பாதிப்பு வரும் என்பதால், தொடக்கத்திலேயே உரிய சிகிச்சை பெற வேண்டும், உணவு கட்டுபாட்டில் அக்கறை செலுத்த வேண்டும் போன்ற விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்திய படி கல்லூரி மாணவ மாணவியர்கள், செவிலியர்கள் மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
பேரணி கண்டோடேன்மென்ட் பகுதியில் உள்ள ஐ பவுண்டேஷன் மருத்துவமனையில் இருந்து தொடங்கி மத்திய பேருந்து நிலையம் வழியாக பல்வேறு பகுதிகளில் பேரணி சென்று பின்னர் மீண்டும் மருத்துவமனையை வந்தடைந்தது.ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14 ஆம் தேதி உலக நீரிழிவு தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையில் இந்த ஆண்டு வயது பருவத்தை மிஞ்சி அனைத்து பருவத்திலும் நீரிழிவு நோய் என்பதை கருப்பொருளாக கொண்டு கடைப்பிடிக்கப்படுவதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.





0 Comments