மனிதநேய மக்கள் கட்சி மனிதநேய அனைத்து வர்த்தகர் நலச்சங்கம் மாவட்ட தலைவர் கபீர் அகமது தலைமையில் தரைக்கடை வியாபாரிகள் திருச்சி மாநகராட்சி ஆணையரிடம் கோரிக்கை மனுவை அளித்தனர்.
மனிதநேய வர்த்தகர் நலச்சங்கம் மற்றும் மனிதநேய அனைத்து வர்த்தக நல சங்கம் தமிழ்நாடு சங்கங்கள் பதிவு சட்டத்தின்படி இயங்கி வருகிறது இந்த சங்கத்தில் 500க்கும் மேற்பட்ட சாலையோர தெரு வியாபாரிகள் இருந்து வருகின்றனர்.திருச்சி கடைவீதி பகுதிகளான என் எஸ் பி ரோடு தெப்பக்குளம், சத்திரம் பஸ் ஸ்டாண்ட் ,வாணப்பட்டறை சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தரைக்கடை வைத்து வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.30 ஆண்டுகளுக்கு மேலாக எந்தவித போக்குவரத்து இடையூறும் மத்திய மாநில அரசுகளின் சாலையோர சிறு வியாபாரிகள் தேசிய கொள்கை பாதுகாப்பு சட்டத்தின் அடிப்படையில் வியாபாரிகளுக்கு உரிய முறையில் மாநகராட்சி மூலம் அடையாள அட்டை வழங்கப்பட்டு மாநகராட்சி மற்றும் காவல் துறை அதிகாரிகளின் கண்காணிப்பில் வியாபாரிகள் வியாபாரம் செய்து இடங்களில் ஒழுங்குபடுத்து வியாபாரம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது வியாபாரம் செய்யும் இடங்களில் இருந்து அவர்களை அகற்றி மாற்று இடம் தரப் போவதாக தீபாவளிக்கு முந்தைய மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக செய்தி தகவல் வந்ததன் அடிப்படையில் வியாபாரிகள் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளக்கப்பட்டு உள்ளனர்.
இதனால் தரைக்கடை வியாபாரிகள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வாழ வழியில்லாத சூழல் ஏற்பட்டு உள்ளது.
எனவே திருச்சி மாநகராட்சி ஆணையர் மதுபாலன் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக சாலையோர சிறையில் வியாபாரிகள் தற்போது வியாபாரம் செய்யும் வரும் கடைவீதியில் சுற்றிலும் உள்ள பகுதிகளான என் எஸ் பி சாலை தெப்பக்குளம் ஆர் உள்ளிட்ட பல்வேறு இடங்களை வியாபாரம் செய்ய அனுமதி வழங்க வேண்டும் ஒருவேளை தவிர்க்க முடியாத காரணங்களால் மாற்றிய இடம் தரும் பட்சத்தில் எங்கள் சங்க நிர்வாகிகள் உடனும் கலந்து ஆலோசக்தி பின்பு எங்களுடைய சங்க உறுப்பினர்களான வியாபாரிகளுக்கு மக்கள் நடமாட்டம் உள்ள இடத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான சிங்காரத்தோப்பு கடை வீதி உள்ளிட்ட பகுதிகளில் வியாபாரம் செய்ய கடை ஒதுக்கி தர வேண்டும் என வலியுறுத்து மாநகராட்சி அலுவலகத்தில் மனு அளித்தனர்.





0 Comments