// NEWS UPDATE *** காவிரி பாசன மாவட்டங்களில் நெல் கொள்முதல் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்; மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ***************** தமிழ்நாட்டில் வாக்காளர் சிறப்பு திருத்தம் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாக தகவல் *** திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் போதை விழிப்புணர்வு மற்றும் உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு

திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் போதை விழிப்புணர்வு மற்றும் உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு

 திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் போதை விழிப்புணர்வு மற்றும் உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு நடைபெற்றது.NMBA (Nasha Mukt Bharat Abiyan)  பிரச்சாரம் திட்டத்தின் 5வது ஆண்டு விழாவினையொட்டி, நவம்பர் 18 அன்று தேசிய அளவில் போதை பொருள் எதிர்ப்பு குறித்த விழிப்புணர்வு மற்றும் உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு நடைபெறுவதை தொடர்ந்து, திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர்  வழிகாட்டுதலின்படி, திருச்சிராப்பள்ளி மாவட்ட நிர்வாகம், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு, மருதமுத்து டிரஸ்ட் மற்றும் காவல்துறையுடன் இணைந்து, திருச்சிராப்பள்ளி ஜமால் முகமது கல்லூரி மாணவர்களிடையே போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து, போதைப்பொருள் எதிர்ப்பு குறித்த உறுதிமொழி ஏற்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், திருச்சி மாநகர காவல் துணை ஆணையர் திரு.ஈஸ்வரன், திருச்சிராப்பள்ளி மாவட்ட துணை ஆட்சியர் (பயிற்சி) திரு.பரூக், திருச்சிராப்பள்ளி மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் திரு.ராகுல்காந்தி, போதைப்பொருள் தடுப்பு மற்றும் குற்றப்புலனாய்வுத்துறை ஆய்வாளர் திருமதி.தேவி, ஜமால் முகமது கல்லூரியின் முதல்வர் திரு.ஜார்ஜ் அமலரெத்தினம், சன்ரைஸ் பவுண்டேசன் நிர்வாக இயக்குநர் திருமதி.பவித்ராமுத்துக்குமரன் மற்றும் மருதமுத்து டிரஸ்ட் நிர்வாக இயக்குநர் திரு.ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு, போதைக்கு அடிமையாதல் எவ்வாறு நடைபெறுகின்றது என்றும், இன்றைய நிலையில் சமூக வலைதளங்களில் அதிகமான இளைஞர்கள் அடிமையாதல் குறித்தும், திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் செயல்படுகின்ற அரசு, அரசு நிதியுதவி பெறும் மற்றும் குழந்தைகளுக்கான போதை மீட்பு மறுவாழ்வு மையங்கள் மற்றும் அவற்றின் சேவைகள் குறித்தும், கல்வியின் முக்கியத்துவம் குறித்தும் போதையால் பாதை மாறுவதால் ஏற்படுகின்ற சட்டரீதியான பாதிப்புகள் குறித்தும், கல்லூரி மாணவர்கள் ஒவ்வொருவரும் போதை பொருளுக்கு எதிரான தூதுவர்களாக செயல்பட வேண்டிய கடமைகள் குறித்தும், சமூகத்தின் ஆனிவேர் இளைஞர்கள் என்றும், அவர்கள் ஒரு குடும்பத்தில் தொடங்கி நாட்டின் குடிமகன் என்ற நிலை வரையிலும் ஒவ்வொரு இளைஞர்களும் மரத்தினை போன்று போதை பொருளுக்கு எதிராக உறுதியாக நிற்பதன் அவசியம் குறித்தும், போதை பொருள் பயன்படுத்துவதால் ஏற்படுகின்ற பாதிப்புகள், மனிதனின் மூளை எவ்வாறு போதை பொருளுக்கு அடிமையாகின்றது என்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

நிகழ்ச்சியில் எனது மாவட்டம் மற்றும் மாநிலத்தினை போதைப்பொருள் இல்லாததாக மாற்றுவதற்கு நாம் அனைவரும் சேர்ந்து உறுதியான முடிவை எடுப்போம் என்றும், எனது நாட்டினை போதைப்பொருள் இல்லாததாக மாற்ற என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன் என்றும் உறுதிமொழி ஏற்கப்பட்டது. தொடர்ந்து, மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் இணையவழி உறுதிமொழியினையும் பதிவு செய்து ஏற்றுக்கொண்டனர். இந்நிகழ்ச்சியில் சுமார் 250 கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். தொடக்கத்தில் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் திரு.ராகுல்காந்தி வரவேற்று பேசினார். இறுதியில் மருதமுத்து டிரஸ்ட் நிர்வாக இயக்குநர் திரு.ராஜேந்திரன் நன்றியுரை வழங்கினார்.

Post a Comment

0 Comments