// NEWS UPDATE *** காவிரி பாசன மாவட்டங்களில் நெல் கொள்முதல் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்; மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ***************** தமிழ்நாட்டில் வாக்காளர் சிறப்பு திருத்தம் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாக தகவல் *** திருச்சியில் பா.ஜ.கட்சியின் ஊடகப் பிரிவு மாநில தலைவர் ரங்க நாயகலு பேட்டி

திருச்சியில் பா.ஜ.கட்சியின் ஊடகப் பிரிவு மாநில தலைவர் ரங்க நாயகலு பேட்டி

திருச்சியில் பெருங்கோட்ட பாஜக மாவட்ட நிர்வாகிகள் மற்றும் ஊடகப்பிரிவு ஆலோசனை கூட்டம் பாஜக மாநகர அலுவலகத்தில் நடைபெற்றது.இதில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஊடகப்பிரிவு மாநில தலைவர் ரங்கநாயகலூ கூறுகையில்...

பத்திரிகையாளர்கள் மட்டுமின்றி அனைவருமே நடுநிலையோடு இருக்க வேண்டும். பத்திரிகை துறையில் பத்தாயிரத்திற்கு மேற்பட்டோர் பணி புரிகின்றனர். 


வருங்காலங்களில் பாரதிய ஜனதா கட்சி அரசு சார்பில் பத்திரிகையா ளர்களுக்கு தேவையான உதவிகள் செய்து தரப்படும்.இவர்கள் அனைவருக்கும் நலத்திட்டங்கள் செயல்படுத்தும் வாழ்க்கையில் மத்திய அரசு திட்டம் கொண்டு வர உள்ளது.மிக விரைவில் மத்திய இணை அமைச்சர் முருகன் முயற்சியால்...


பிரதமரை இழிவாக கேலிச்சித்திரம் வரைவது கண்டிக்கத்தக்கது.பிரதமரை விமர்சித்து கேலிச்சித்திரம் வரைந்தது கண்டிக்கிறோம்.பிரதமர் மற்றும் தேசிய தலைவர்களை இழிவாக சித்தரிப்பது குறைத்துக் கொள்ள வேண்டும். பத்திரிகையாளர்களுக்கும் வரையறை உள்ளது அதை கடந்த செயலாக இருக்கும் பொழுது வருத்தமளிக்கிறது. த.வெ.க. சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றிருந்தாலும் எந்த ஒரு ஆர்ப்பாட்டத்திலும் கட்சி தலைவர் விஜய் பங்கேற்கவில்லை.

உண்மையான வாக்காளர்களின் உரிமையைப் பெற்றுத் தந்தது சிறப்பு திருத்தம் தான். முழுமையாக அதைப்பற்றி தெரியாத கட்சியினர் அதற்கு எதிராக போராட்டம் நடத்துவது கண்டிக்கத்தக்கது. சிறப்பு திருத்தம் பணி முறையாக நடக்க வேண்டும் என்பதற்கு முழு முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது.சிறப்பு திருத்தம் பணி என்றாலே திமுகவினர் பயப்படுகின்றனர் இத்தனை காலமும் அவர்கள் இதை சாதகமாக வைத்து தான் வெற்றி பெற்று வந்தனர்.அதனால் சிறப்பு திருத்தம் வாயிலாக வாக்காளர் பட்டியல் தூய்மைப்படுத்தப்படும். இதன்மூலம் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும்.இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சி ஊடகப்பிரிவு மாநில செயலாளர் சிவகுமார் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர்  L. கண்ணன் அவர்கள் திருச்சி பெருங்கோட்ட அமைப்பு செயலாளர் திரு கே பாலன் அவர்கள் மாவட்ட பொதுச் செயலாளர் திருமதி லீமா சிவகுமார் அவர்கள் ஊடகப்பிரிவு மாநில செயலாளர் திரு ஜெ குரு, டீ ஸ்ரீதர், திருச்சி பெருங்கோட்டத்துக்கு உட்பட்ட மாவட்ட தலைவர்கள், மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள். 

Post a Comment

0 Comments