// NEWS UPDATE *** காவிரி பாசன மாவட்டங்களில் நெல் கொள்முதல் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்; மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ***************** தமிழ்நாட்டில் வாக்காளர் சிறப்பு திருத்தம் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாக தகவல் *** தேமுதிக திருச்சி தெற்கு மாவட்ட ஆலோசனை கூட்டம்

தேமுதிக திருச்சி தெற்கு மாவட்ட ஆலோசனை கூட்டம்

தேசிய முற்போக்கு திராவிட கழகம் திருச்சி தெற்கு மாவட்டம் ஸ்ரீரங்கம் பகுதி கழகத்தை பிரிப்பது குறித்தும் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில்  BLA-2 முகவர்கள் ஐந்து பேர் கொண்ட பூத் கமிட்டி உறுப்பினர்கள்  பணியாற்றுவது குறித்தும் ஜனவரி-9, கடலூர் மாநாடு செல்வது குறித்தும் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் ஸ்ரீரங்கத்தில் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர்  மாத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் ஆர் பாரதிதாசன்  தலைமையில்  ஸ்ரீரங்கம் பஸ் ஸ்டாண்ட் அருகில் கனரா பேங்க் மற்றும் கரூர் வைசியா பேங்க் எதிரில் உள்ள பத்மாவதி கல்யாண மண்டபத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கழகத் துணைச் செயலாளரும் டெல்டா மண்டல பொறுப்பாளருமான  S.செந்தில்குமார் Ex, MLA. அவர்கள் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார்.


இக்கூட்டத்தில் மாவட்ட துணைச் செயலாளர் சதீஷ்குமார்  அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்  மாவட்ட அவைத் தலைவர் ஒன்றிய கவுன்சிலர் பி அர்ஜுன் மாவட்டக் கழக துணை செயலாளர் டி நீலமேகம், பகுதி கழக அவை தலைவர் பாலாஜி,    வட்ட கழக   செயலாளர்கள் சுரேஷ், ரங்கராஜ்,ரங்கன், பாஸ்கர், ரவிச்சந்திரன், வடமலை மற்றும் ஸ்ரீரங்கம் பகுதி கழக நிர்வாகிகள்   திரளாக கலந்து கொண்டனர் முடிவில்  கழக மாற்றுத்திறனாளி அணி துணைச் செயலாளர்  c.வாஞ்சி குமரவேல் அவர்கள் நன்றியுரை வழங்கினார்

Post a Comment

0 Comments