திருச்சி மாவட்டத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் காளைகளுக்கு ஆன்லைன் முறையில் டோக்கன் பெறுவதை தடை செய்ய வேண்டும், உள்ளூர் மாடுகளுக்கு உரிய பிரதிநிதித்துவமும் (70% உள்ளூர் காளைகளுக்கும் 30 % வெளி மாவட்ட காளைகளுக்கும்) உள்ளூர் மாடுபிடி வீரர்களுக்கும் உரிய முக்கியத்துவம் வழங்க வேண்டும், தமிழ்நாடு அரசு 2016 சட்டமன்ற தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டபடி ஜல்லிக்கட்டு காளை வளர்ப்பவர்களுக்கு மாதம்தோறும் ரூ.1000 ஊக்கத்தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சமூக நீதிப் பேரவை மாநில தலைவர் ரவிக்குமார் தலைமையிலான நிர்வாகிகள், திருச்சி ராஜா காலனி பகுதியில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை, ஜல்லிக்கட்டு காளைகளுடன் பேரணியாக சென்று, ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.
இந்த நிகழ்வில் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள், மாடுபிடி வீரர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

0 Comments