// NEWS UPDATE *** 2026 சட்டமன்ற தேர்தலுக்கான தேமுதிக விருப்பமனு விநியோகம் இன்றுடன் நிறைவு பெற இருந்த நிலையில் 3 நாட்கள் அவகாசம் நீட்டிப்பு வரும் 15ம் தேதிக்குள் விருப்பமனுக்களை தேமுதிக தலைமை அலுவலகத்தில் ஒப்படைக்க அறிவுறுத்தல் *** வரும் ஜனவரி 6ஆம் தேதி மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாக அங்கன்வாடி ஊழியர்கள் அறிவிப்பு..

வரும் ஜனவரி 6ஆம் தேதி மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாக அங்கன்வாடி ஊழியர்கள் அறிவிப்பு..

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் சங்கம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில செயலாளர் ராணி தலைமை தாங்கினார். மேலும் பல ஆண்டுகளாக சத்துணவு ஊழியர்களுக்கு வழங்கப்படாத பணி உயர்வு மற்றும் பணி நிரந்தரம் ஊதிய உயர்வு அதேபோன்று பழைய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் காலியாக உள்ள இடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். குறிப்பாக பணிச்சுமை ஏற்படுத்தும் கூடுதல் பணிகளை தவிர்க்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து பல கட்ட போராட்டங்கள் நடத்தியும் இதுவரை மாநில அரசு எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகையால் எங்களுடைய கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்று அடுத்த கட்டமாக வரும் ஜனவரி 6ஆம் தேதி மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் இந்த போராட்டத்தில் 2000 க்கும் மேற்பட்ட சங்க உறுப்பினர்கள் கலந்து கொள்வார்கள் என தெரிவித்தார். 


இந்தப் போராட்டத்திற்கு பிறகு மாநில அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால் எங்களுடைய அடுத்த கட்ட நிலைப்பாடு குறித்து அறிவிப்போம் என கூறினார்.

Post a Comment

0 Comments