// NEWS UPDATE *** 2 நாட்கள் அரசுமுறை பயணமாக ஜோர்டான் சென்றடைந்தார் பிரதமர் மோடி ********* தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நியமனம் *** எங்களது கோரிக்கை ஏற்காவிட்டால் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம் - தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாநிலத் தலைவர் திருச்சியில் பேட்டி

எங்களது கோரிக்கை ஏற்காவிட்டால் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம் - தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாநிலத் தலைவர் திருச்சியில் பேட்டி

தமிழ்நாடு அரசு பால்வளத்துறை அரசு அலுவலர் மற்றும் பணியாளர் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சி பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் ஹோட்டலில் மாநிலத் தலைவர் ஜெயபாலன் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாநில தலைவர் அமிர்தகுமார், மாநில அவைத்தலைவர் இரா.சுரேஷ், மற்றும் நிர்வாகிகள் இரா கணேஷ் கிருஷ்ணசாமி, கோவிந்தராஜன், பாலாஜி தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாவட்ட தலைவர் சந்திரசேகரன், உட்பட மாநில மாவட்ட நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.


தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாநில தலைவர் அமிர்தகுமார் தற்போது போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அரசு ஊழியர் சங்கங்களை கடந்த 22ஆம் தேதி 3அமைச்சர்கள் கொண்ட குழு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்

வரும் பொங்கலுக்குள் முடிவு தெரிவிக்காவிட்டால் 6ம் தேதி நடத்த உள்ள தொடர் போராட்டத்தை குறித்து பரிசீலிக்கப்படும் என அக்குழுவிடம் தெரிவித்துள்ளோம்.கடந்த 22ஆண்டுகளாக தொடர்ந்து பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும், கூடுதல் துணை பால் ஆணையர் பணியிடத்தையும் பால் வளத்துறையில் உள்ள மூத்த உறுப்பினர்களுக்கு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம். ஏற்கனவே அமைச்சர்கள் அழைத்துப் பேசியதில் எந்த தீர்வும் ஏற்படாததால் ஏற்கனவே திட்டமிட்டபடி வருகிற 29ஆம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மாவட்ட ஆட்சியா அலுவலகம் முன்பு கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்.இதிலும் அரசு தீர்வு காணாவிட்டால் தொடர்ந்து வரும் ஜனவரி 6ஆம் தேதி தமிழக முழுவதும் காலவரையற்ற போராட்டம் நடத்துவதாக தெரிவித்து அதற்கான கடிதமும் அரசுக்கு வழங்கி உள்ளோம் என தெரிவித்தார்.

Post a Comment

0 Comments