திருச்சி ஹாஸ்டல் ஓனர்ஸ் அமைப்பு, கோயம்புத்தூர் ஹாஸ்டல் ஓனர் அசோசியேஷனுடன் இணைந்து தனது சேவையை திருச்சியில் தொடங்கியுள்ளது.
இதன் தொடக்கமாக நடைபெற்ற கூட்டத்தில், விடுதிகளுக்கான அரசாங்க உரிமம், ஜிஎஸ்டி, வணிகக் கட்டிட வரி, ஆட்சியர் உரிமம், வணிக மின்சார கட்டணம் உள்ளிட்ட பல முக்கிய கருத்துகள் விரிவாக பகிரப்பட்டன.
இந்த நிகழ்வில் காளிதாஸ், விஜயகுமார், வீரப்பெருமாள், ஜே.கே.பஷீர், ஜெயராஜ், அனுராதா, ஷபானா அஸ்மி மற்றும் திருமதி மதியரசி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன் தொடர்ச்சியாக, 25.12.2025 தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை மற்றும் தமிழ்நாடு குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேருவை நேரில் சந்தித்து, விடுதிகளுக்கான அரசாங்க உரிமம், ஜிஎஸ்டி, வணிகக் கட்டிட வரி, வணிக மின்சார கட்டணம் மற்றும் ஆட்சியர் உரிமம் ஆகியவற்றில் சலுகைகள் வழங்க வேண்டி, திருச்சி மண்டலம் ஹாஸ்டல் ஓனர்ஸ் நிர்வாகிகள் சார்பில் மனு அளிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் அருண் நேரு, திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் மதுபாலா ஆகியோரையும் சந்தித்தனர்.






0 Comments