// NEWS UPDATE *** காவிரி பாசன மாவட்டங்களில் நெல் கொள்முதல் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்; மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ***************** தமிழ்நாட்டில் வாக்காளர் சிறப்பு திருத்தம் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாக தகவல் *** தமிழ்நாடு அரசு டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் பேரமைப்பு சார்பில் மாநிலம் தழுவிய வேலை நிறுத்தம் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு அரசு டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் பேரமைப்பு சார்பில் மாநிலம் தழுவிய வேலை நிறுத்தம் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம்

 தமிழ்நாடு அரசு டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் பேரமைப்பு சார்பில் காலிபாட்டில் சேகரிக்கும் பணியில் டாஸ்மாக் பணியாளர்களை ஈடுபடுத்தக் கூடாது ,காலி பாட்டில் சேகரிப்பிற்கு தனிமுகமை அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய வேலை நிறுத்தமும் மற்றும் மண்டலங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

திருச்சி மண்டலத்தில் (திருச்சி கடலூர் விழுப்புரம் உள்ளிட்ட) மாவட்டங்கள் கலந்து கொண்ட கண்டன ஆர்ப்பாட்டம் திருச்சி முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகம் முன்பு நடைபெற்றது..இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மண்டல பொறுப்பாளர் கு. சரவணன் தலைமை தாங்கினார்.


மாநில பொருளாளர் டி. ஜெய்கணேஷ் மாநிலச் செயலாளர் பி .முருகானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர் இதில் மாநில நிர்வாகி இளங்கோ திருச்சி மாவட்ட தலைவர் பிச்சைமுத்து கடலூர் மாவட்ட தலைவர் அல்லி முத்துவிழுப்புரம் மாவட்ட தலைவர் அன்பழகன் கடலூர் மாவட்ட செயலாளர் பாலமுருகன் கண்டன உரையாற்றினார்கள் 


இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் டெல்லி அப்பாதுரை பாத்திமா, ஆகியோர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்கள் .இறுதியாக தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் வி .சிவகுமார் சிறப்புரை ஆற்றினார்.திருச்சி மாவட்ட நிர்வாகி சுப்பிரமணியன் நன்றி கூறினார் .திருச்சி மண்டலம் பல்வேறு மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கணக்கான பணியாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

Post a Comment

0 Comments