புதிய ஹஜ் இல்லத்தை நிர்வாகிக்கும் பொறுப்பை ஹஜ் ஏற்பாட்டு குழுவிடம் ஒப்படைக்க வேண்டும் – தமிழக அரசுக்கு ஹஜ் ஏற்பாட்டு குழு கோரிக்கை வைத்தனர்.ஹஜ் ஏற்பாட்டு குழு துணைத் தலைவர் லேனா ஈசாக் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
சென்னை பரங்கி மலையில் தமிழ்நாடு அரசு சார்பில் ரூ 39.20கோடி மதிப்பில் சுமார் 400 ஹஜ் பயணிகள் தங்கக்கூடிய புதிய ஹஜ் இல்லம் கட்டும் பணியைதமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். அதற்கு இந்த நேரத்தில் தமிழக முதலமைச்சருக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம் என தெரிவித்தார்.அதே சமயத்தில் ஒரு கோரிக்கையையும் வைக்கிறோம். இந்த புதிய ஹஜ் இல்லத்தை நிர்வாகிக்கும் பொறுப்பை ஹஜ் ஏற்பாட்டு குழுவிடம் ஒப்படைக்க வேண்டும்.
ஹஜ் பயணம் 2026ம்ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொள்ள இந்திய அரசு ஒரு லட்சத்து 75 ஆயிரத்து 815 பேருக்கு அனுமதி வழங்கி உள்ளது இதில் தனியாருக்கு 52 ஆயிரத்து 507 சீட்டு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பொதுவாக ஹஜ் பயணம் ஏப்ரல் மாததிற்கு பத்து நாட்களுக்கு முன்பும் வரை முன்பதிவு செய்து வந்த நிலையில் இந்த ஆண்டு மத்திய அரசு திடீரென்று உடனடியாக வருகிற ஜன 15 ந் தேதிக்குள் ஹஜ் பயணம் மேற்கொள்பவர்கள் முன்பதிவு செய்து விட வேண்டும் என்று அறிவித்துள்ளது. எனவே ஹஜ் பயணம் மேற்கொள்ளும் நபர்கள் உடனடியாக முன்பதிவு செய்ய வேண்டும் என்று கூறிக் கொள்கிறோம். அதே சமயத்தில் தங்களுடைய முன்பதிவுவை மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் ஏஜென்சியில் பதிவு செய்ய வேண்டும்.
குறிப்பாக கோவை அல் ஆதம் ஹஜ் சர்வீஸ் ,திருச்சி சன் சைன் டிராவல்ஸ், அல் ஹீரா ஹஜ், சர்வீஸ் மூலம் ஹஜ் பயணிகள் புனித பயணம் மேற்கொள்ளலாம்போதிய இடங்கள் நிறைய இருக்கிறது. இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி மக்கள் ஹஜ் புனித பயணம் மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.பேட்டியின் போது சன் சைன் பசல்,முகமது சிகான் ஆகியோர் உடன் இருந்தனர்.



0 Comments