நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த நாளை முன்னிட்டு, நேதாஜி மக்கள் பாதுகாப்பு இயக்க நிறுவன தலைவர் சுகு பூப்பாண்டியன் உத்தரவின்படி, நேதாஜி மக்கள் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பாக, திருச்சி பொன்மலைப்பட்டி புதுப்பாலம் அருகே நாளை (ஜன.23) காலை 11 மணி அளவில், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்தநாள் விழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. அதனை தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட உள்ளது. இந்த நிகழ்வில் இயக்க நிர்வாகிகள், உறுப்பினர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என நேதாஜி மக்கள் பாதுகாப்பு இயக்கத்தின் மாநில பொது செயலாளர் ஜெபி அழைப்பு விடுத்துள்ளார்.
மேலும் பிஎம்டி மக்கள் பாதுகாப்பு இயக்கத்தின் மாநில தலைவரான இசக்கிராஜா தேவர், இயக்குனர் முத்தையாவை விமர்சித்ததை கண்டித்து, முக்குலத்தோருக்கு இதுவரை பிஎம்டி மக்கள் பாதுகாப்பு இயக்கம் இதுவரை என்ன செய்தது என கேள்விகள் எழுப்பி வீடியோ ஒன்றை சமுக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். அது மட்டுமல்லாது இது போன்ற சாதி தலைவர்களை நம்பி இளைஞர்கள் யாரும் செல்ல வேண்டாம் என மாநில பொது செயலாளர் ஜெபி அறிவுரை வழங்கியுள்ளார்.

0 Comments