// NEWS UPDATE *** "வாக்காளர் பட்டியலில் திருத்தங்களை மேற்கொள்ள ஜன.31 வரை கால அவகாசம் நீட்டிப்பு" - தேர்தல் ஆணையம் *** 2026 தேர்தலை முன்னிட்டு இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பினர் தேர்தல் அறிக்கை வெளியீடு

2026 தேர்தலை முன்னிட்டு இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பினர் தேர்தல் அறிக்கை வெளியீடு

2026 தேர்தலை முன்னிட்டு மாணவர் தேர்தல் அறிக்கை வெளியீடு - தேசிய கல்விக் கொள்கையை மறைமுகமாக கூட தமிழ்நாட்டில் அமல்படுத்த கூடாது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன

இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பின்(SIO) சார்பில் திருச்சியில் இன்று மாணவர் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. பின்னர் அந்த அமைப்பின் மாநில பொதுச்செயலாளர் முஹம்மது ஜாஃபர் மாணவர் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கங்கள் குறித்து பேசினார். அதில்,



இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு கடந்த 43 ஆண்டுகளுக்கு மேலாக இந்தியாவில் மாணவ இளைஞர்களின் கல்வி மேம்பாட்டிற்காக பல்வேறு பணிகளை செய்து வருகிறோம் அந்த வகையில் வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடக் கூடியவர்களுக்கு பல்வேறு முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து தேர்தல் அறிக்கையை தயார் செய்துள்ளோம். நான்கு தலைப்பின் கீழ் சுமார் 40க்கும் மேற்பட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அந்த தேர்தல் அறிக்கையை தயார் செய்துள்ளோம். அந்த தேர்தல் அறிக்கையில்,


நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க வேண்டும், தேசிய கல்விக் கொள்கையை தமிழ்நாட்டில் மறைமுகமாக கூட நடைமுறைப்படுத்தக் கூடாது, ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், அரசு பள்ளி ஆசிரியர்களை வேறு பணிகளில் ஈடுபடுத்தக் கூடாது,


தற்காலிக மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு அரசே குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயம் செய்ய வேண்டும், கல்வி உரிமை சட்டத்தின் கீழ் மாணவர்களுக்கான கல்வி செலவை முழுமையாக அரசே ஏற்றுக் கொள்ள வேண்டும்

யுனானி மருத்துவ துறையில் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும், வக்ஃபுக்கு சொந்தமான இடங்களில் சிறுபான்மை மாணவர்களுக்கான பள்ளி கல்லூரிகள் நிறுவப்பட வேண்டும், இஸ்லாமிய மாணவர்களுக்கான தங்கும் விடுதிகளை அரசு அமைத்து தர வேண்டும், மாணவர்களின் கல்விக் கடன்களை அரசு ரத்து செய்ய வேண்டும், பழங்குடியின மக்களுக்கு ஜாதி சான்றிதழ்களை எந்த தடங்கலும் இல்லாமல் வழங்க வேண்டும், கல்வி வேலை வாய்ப்புகளில் இஸ்லாமியர்களுக்கான இட ஒதுக்கீடை ஏழு சதவீதமாக அதிகரித்து வழங்க வேண்டும், கல்வி வளாகங்களில் மாணவர் சங்கத் தேர்தல்களை மீண்டும் நடத்திட வேண்டும், இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்பு பிரச்சாரங்களை தடுக்க தனி சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் உள்ளிட்டவற்றை மையப்படுத்தி தேர்தல் அறிக்கையை தயார் செய்துள்ளோம் இதனை அடுத்து வரக்கூடிய ஆட்சியாளர்கள் நிறைவேற்றி தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம் இந்த தேர்தல் அறிக்கையை தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் போட்டியிடக்கூடிய வேட்பாளர்களிடம் ஒன்று சேர்ப்போம் அதேபோல கட்சிகளின் தலைவர்கள் முக்கிய பிரமுகர்கள் கல்வியாளர்கள் உள்ளிட்டவர்களிடமும் இதை கொண்டு சேர்த்து மாணவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற அடுத்து வரும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துவோம் என்றார்.



Post a Comment

0 Comments