// NEWS UPDATE *** திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை *** ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு செந்தமிழ் தமிழ் நாட்காட்டி வழங்கல்!

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு செந்தமிழ் தமிழ் நாட்காட்டி வழங்கல்!

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு திருச்சி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை சார்பில் செந்தமிழ் தமிழ் நாட்காட்டி வழங்கும் நிகழ்ச்சி திருச்சி புத்தூரில் நடைபெற்றது. அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் சமூக செயற்பாட்டாளர் கீர்த்தனா முன்னிலையில்


செந்தமிழ் தமிழ் மாத நாட்காட்டியை  சாலை பயனீட்டாளர் நல அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் அய்யாரப்பனிடம் வழங்கி பேசுகையில்...செந்தமிழ் தமிழ் நாட்காட்டி என்பது தூய தமிழ்ப் பெயர்கள், தமிழ் எண்கள் மற்றும் பாரம்பரிய தமிழ் நாட்களைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் ஒரு நாட்காட்டி ஆகும்,  இது தமிழ் மாதங்கள் சுறவம் (தை) ,கும்பம் (மாசி), மீனம் (பங்குனி), மேழம்(சித்திரை), விடை (வைகாசி),உடலை (ஆனி),, கடகம் (ஆடி), மடங்கல் (ஆவணி), கன்னி(புரட்டாசி), துலை (ஐப்பசி), பள்ளி ( கார்த்திகை), சிலை ( மார்கழி) எனவும் கிழமைகள் ஞாயிறு, திங்கள், செவ்வாய் அறிவன் (புதன்), வியாழன் வெள்ளி காரி ( சனி) போன்றவை அச்சிடப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாத நாட்காட்டியில் திருக்குறளும் விளக்கமும் இடம்பெற்றுள்ளன. தமிழ் எண்களின் வளர்ச்சி கல்வெட்டுகளில் உள்ள வளர்ச்சி எழுத்துக்களின் வளர்ச்சி அச்சிடப்பட்டுள்ளனதமிழ் எண்களின் வரிவடிவங்களில் (௧, ௨, ௩, ...) அச்சிடப்பட்டுள்ளன.வள்ளலார் நினைவு நாள், ஞானியார் அடிகள் நினைவு நாள் போன்ற தமிழறிஞர்களின் நாட்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. செந்தமிழ் தமிழ் நாட்காட்டி தமிழ் மரபுகளைப் பின்பற்றுவதற்கும், விழாக்களைத் திட்டமிடுவதற்கும் உதவுகிறது.கிரிகோரியன் நாட்காட்டியுடன் ஒப்பிட்டு, தமிழ் தேதிகளை அறிய உதவுகிறது (எ.கா., தை 1 திருவள்ளுவர் நாட்காட்டியில் உள்ளது) என்றார்.

Post a Comment

0 Comments