திருச்சி வரலாற்று ஆர்வலர் குழு சார்பில் திருச்சி வரலாற்றில் முஹமதியா ஜாமிஆ மஸ்ஜித் (எ)சௌக் பள்ளிவாசல் குறித்து அறிந்து கொள்ள, திருச்சி ஓர் பார்வை ஓர் பயணம் நிகழ்வினை திருச்சி வரலாற்று ஆர்வலர் குழு நிறுவனத் தலைவர் விஜயகுமார், சங்க கால நாணயங்கள் சேகரிப்பாளர் முகமது சுபேர், பாலிமர் பணத்தாள்கள் சேகரிப்பாளர் இளம்வழுதி, வரலாற்று ஆசிரியர் அரிஸ்டோ வசந்தகுமார் உள்ளிட்டோர் மேற்கொண்டனர்.
திருச்சி வரலாற்றில் முஹமதியா ஜாமிஆ மஸ்ஜித் (எ)சௌக் பள்ளிவாசல் குறித்து திருச்சி வரலாற்று ஆர்வலர் குழு நிறுவனத் தலைவர் விஜயகுமார் பேசுகையில்...முஹமதியா ஜாமிஆ மஸ்ஜித் (எ)சௌக் பள்ளிவாசல் திருச்சி மாநகரில் அமைந்துள்ள 400 ஆண்டுகள் பழமையான வரலாற்று சிறப்புமிக்க மசூதியாகும், இது அதன் அழகிய கல் கட்டிடக்கலை மற்றும் வரலாற்று முக்கியத்துவத்திற்கு பெயர் பெற்றது. இந்த மசூதி அஹலே சுன்னத் வல் ஜமாஅத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. பரந்த பிரார்த்தனை பகுதியைக் கொண்ட புகழ்பெற்ற தளமாகும்.திருச்சியில் இஸ்லாமிய மக்களின் அடையாளம் மிகவும் வலுவானது, பல நூற்றாண்டுகள் பழமையான ஒரு வளமான வரலாற்று பாரம்பரியத்துடன். இந்த அடையாளத்தை மேலும் வலுப்படுத்தும் ஒரு கட்டிடக்கலை சிறப்பானதாகும். முகலாய பேரரசர் நவாப் அசத்துல்லா கான் 1765 இல் கட்டிய மசூதி கர்நாடகாவின் குல்பர்கா மாவட்டத்திலிருந்து சாலை வழியாக கொண்டு வரப்பட்ட கற்களால் ஆன சுவர்கள் மற்றும் தூண்களைக் கொண்டுள்ளது, யானைகளால் சுமந்து செல்லப்பட்டது. ஒவ்வொரு கல்லும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ள கட்டமைப்பு அழகானதாகும். மசூதியின் பிரார்த்தனை இடம் மற்றும் வெளிப்புற செஹான் இரண்டும் 75 அடிக்கு 75 அடி ஆகும். இங்குள்ள குளம் 75 அடி அகலம், 75 அடி நீளம் கொண்டது. இந்த மசூதி இஸ்லாமிய மற்றும் முகலாய கட்டிடக்கலைகளுக்கு ஒரு சான்றாகும்.

0 Comments