// NEWS UPDATE *** "விஜய் வீட்டை விட்டு வெளியே வா என்கிறார்கள். ஓட்டு போடும் நாளில் ஒவ்வொரு வீட்டிலிருக்கும் விஜய்யும் வெளியே வந்து ஓட்டு போடுவார்கள். அன்றைக்கு தெரியும்.. விஜய்யை ஏன் வெளியே அழைத்தோம் என்று" -தவெக ஆண்டுவிழாவில் விஜய் *** 2026 தேர்தலில் அகில இந்திய மஜ்லிஸ் கட்சி போட்டியிடும் மாநிலத் தலைவர் அறிவிப்பு

2026 தேர்தலில் அகில இந்திய மஜ்லிஸ் கட்சி போட்டியிடும் மாநிலத் தலைவர் அறிவிப்பு

2026 தேர்தலில்அகில இந்திய மஜ்லிஸ் கட்சி போட்டியிடும் மாநிலத் தலைவர் தெரிவித்துள்ளார்.அகில இந்திய மஜ்லிஸ் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் திருச்சி மரக்கடை அருகே உள்ள தனியார் அரங்கில் மாநில இளைஞரணி செயலாளர் ஷேக் முகமது பாருக் தலைமையில் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் மாநில தலைவர்  வக்கீல் அஹமது,மாநில பொருளாளர்,இன்டர்நேஷனல் மஜீத்,துணைப் பொதுச் செயலாளர் கமுர்தீன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர்.

மாநில செயலாளர் உணர்வு இப்ராஹீம், மாநில இணை பொதுச் செயலாளர் ஆல்ஃபா நஜீர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


இந்த மாவட்ட ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு கட்சி மற்றும் அமைப்புகளில் உள்ள சுமார் 50க்கும் மேற்பட்டவர்கள் தங்களை கட்சியில் இணைத்துக் கொண்டனர் புதிதாக கட்சியில் இணைந்தவர்களுக்கு சால்வை அணிவித்து வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.மாநிலத் தலைவர் வக்கீல் அஹமது பேசுகையில்... அகில இந்திய மஜ்லிஸ் கட்சி  தேசிய கட்சி இந்த கட்சி ஜாதி மதம் பாகுபாடு இல்லாமல் அனைவரையும் சமமாக பார்க்கக்கூடிய கட்சியாகவும் அவர்களுக்காக உரிமைகளை பெற்றுக் கொடுக்கும் கட்சியாகவும் தேசிய அளவில் செயல்பட்டு வருகிறது.

தமிழகத்திலும் வருகிற சட்டமன்றத் தேர்தலில் 2026 ல் போட்டியிட உள்ளோம்.அதற்கான ஆயத்தப் பணிகள் ஆலோசனைகள் பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது.திமுக சிறுபான்மையினருக்காக குரல் கொடுக்கும் கட்சி என்று சொன்னாலும் ஆனால் உண்மையில் குரல் கொடுப்பதில்லை.சிறைவாசிகள் விடுதலை, இட ஒதுக்கீடு,போன்ற பல்வேறு உதாரணங்களைக் கூற முடியும் மஜ்லிஸ் கட்சியின் செயல்பாடுகளை பார்த்து பல்வேறு மாவட்டங்களில் ஆர்வமுடன் இக்கட்சியில் இணைந்து வருகின்றனர் எனவும் பேசினார்.இந்த கூட்டத்தில் மாநில மாவட்ட கிளை நிர்வாகிகள் உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.கூட்டத்தின் முடிவில் மாவட்ட தலைவர் அப்பாஸ், நன்றி கூறினார்

Post a Comment

0 Comments