// NEWS UPDATE *** த.வெ.க.வின் தேர்தல் வாக்குறுதிப்படி பயிர்கடனை முழுமையாக ரத்து செய்யக்கோரி பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் *** திருச்சியில் ஆளுநர் விருதாளருக்கு பாராட்டு!

திருச்சியில் ஆளுநர் விருதாளருக்கு பாராட்டு!

திருச்சி தென்னூர் நடுநிலைப்பள்ளி ஆண்டு விழாவில் தமிழ்நாடு ஆளுநர் விருது பெற்ற அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் விஜயகுமார் தன்னலமற்றப் பணியினை பாராட்டினர்.

திருச்சி தென்னூர் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் விமலா தலைமை வகித்து பள்ளி ஆண்டறிக்கை வாசித்தார்.மேனாள் கிராம நிர்வாக அலுவலர் இராஜமாணிக்கம், காஞ்சிபுரம் மாவட்ட கல்வி மற்றும் பயிற்சி நிறுவன மேனாள் முதல்வர் சிவகுமார் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். திருச்சிராப்பள்ளி ராயல் லயன்ஸ் சங்க சாசனத் தலைவர் முகமது ஷபி சிறப்புரையாற்றினார். நிகழ்வில் உரிமை கோரப்படாத ஆதரவற்ற அனாதை பிணங்களை உரிய மரியாதையுடன் நல்லடக்கம் செய்து வரும் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் 2023ஆம் ஆண்டு திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் பாராட்டு சான்றிதழும், 2026 ஆம் ஆண்டு ஆளுநர் விருதும் பெற்றவரை நினைவு பரிசு வழங்கிப் பாராட்டினார்கள்.

முன்னதாக லாரன்ஸ் அமலின் சவரிராஜ் வரவேற்க, நிறைவாக சங்கீதா நன்றி கூறினார்

Post a Comment

0 Comments