// NEWS UPDATE *** பொறியாளர் சுவாதி கொலை வழக்கில் கைதான ராம்குமார் சிறையில் தற்கொலை செய்தது தொடர்பான வழக்கை முடித்துவைத்தது செல்லும் - ராம்குமாரின் தந்தை பரமசிவம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு *** ஆளுநர் விருது பெற்ற திருச்சி சமூக செயற்பாட்டாளரைப் பாராட்டிய திருச்சி மாவட்ட வீடியோ மற்றும் போட்டோ ஒளிப்பதிவாளர்கள் சங்க நிர்வாகிகள்!

ஆளுநர் விருது பெற்ற திருச்சி சமூக செயற்பாட்டாளரைப் பாராட்டிய திருச்சி மாவட்ட வீடியோ மற்றும் போட்டோ ஒளிப்பதிவாளர்கள் சங்க நிர்வாகிகள்!

 சாதி, மத, இன வேறுபாடு இன்றி உரிமைக்கோரப்படாத ஆதரவற்ற சடலங்களை உரிய மரியாதையுடன் கண்ணியமான முறையில் நல்லடக்கம் செய்து வரும் திருச்சி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் சமூகப் பணியினை பாராட்டி தமிழ்நாடு ஆளுநர்,‌குடியரசு தினத்தன்று தனிநபர்‌ பிரிவில் சிறந்த சமூக சேவையில் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்த தனிநபர் பிரிவில் முன் மாதிரியான சேவை,  அர்ப்பணிப்பு மற்றும் சமூக நலனில் கொண்ட தன்னலமற்றப் பணியைப் பாராட்டி  ஆளுநர் விருதினை 2026 குடியரசு தினத்தில் மக்கள் மாளிகையில் வழங்கினார்.  

தமிழக அமைச்சரவையில் வீட்டு வசதித் துறை அமைச்சராக பொறுப்பு வகித்த முன்னாள் அமைச்சர் நல்லுசாமி ஆளுநர் விருது பெற்ற யோகா ஆசிரியர் விஜயகுமார்க்கு திருச்சி மாவட்ட  வீடியோ மற்றும் போட்டோ ஒளிப்பதிவாளர்கள் சங்கத்தலைவர் பாலாஜி,செயலாளர் யோகாநந்தம், பொருளாளர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட நிர்வாகிகள் பொன்னாடை அணிவித்து பாராட்டினர்.

Post a Comment

0 Comments