திருச்சிராப்பள்ளி மாவட்ட நிர்வாகம், பொது நூலக இயக்ககம் சார்பில் திருச்சி புத்தகத் திருவிழா 2026 சிஎஸ்ஐ செயின்ட் ஜான்ஸ் வெஸ்ட்ரி மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் பிப்ரவரி 14 முதல் 22ஆம் தேதிகளில் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறுகிறது. திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்கம் அரங்கு எண்17 இல் எழுத்தாளர் யோகா ஆசிரியர் விஜயகுமார் எழுதிய க்ரியா நூல் அறிமுக விழா நடைபெற்றது.
எழுத்தாளர் யோகா ஆசிரியர் விஜயகுமார் எழுதிய க்ரியா நூலை அறிமுகப்படுத்த , பத்மஸ்ரீ சுப்புராமன் திருச்சி மாவட்ட நூலக அலுவலர் சரவணக்குமார்,திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்க பொதுசெயலர் ஜவகர் ஆறுமுகம் திருச்சி மாவட்டம் மைய நூலக வாசகர் வட்டத் தலைவர் அல்லிராணி பேராசிரியர் முனைவர் நெடுஞ்செழியன் எழுத்தாளர் சிவன் ராஜேந்திரன் உட்பட பல்வேறு எழுத்தாளர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

0 Comments