// NEWS UPDATE *** பொறியாளர் சுவாதி கொலை வழக்கில் கைதான ராம்குமார் சிறையில் தற்கொலை செய்தது தொடர்பான வழக்கை முடித்துவைத்தது செல்லும் - ராம்குமாரின் தந்தை பரமசிவம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு *** திருச்சியில் TRIOGS புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா

திருச்சியில் TRIOGS புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா

திருச்சி மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவ சங்கம் (TRIOGS) சார்பில் 2026–2027 ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா,திருச்சியில் உள்ள ஹோட்டல் கோர்ட்யார்ட் பை மேரியட்டில் நடைபெற்றது.

இந்த விழாவில் சங்கத்தின் புதிய தலைவராக டாக்டர் சார்மிளா அய்யாவூ பதவி ஏற்றார். துணைத் தலைவர்களாக டாக்டர் விக்டோரியா ஜான்ஸ்டன் மற்றும் டாக்டர் கவிதா செந்தில், செயலாளராக டாக்டர் விஜயப்ரபா செழியன், இணை செயலாளராக டாக்டர் லாவண்யா சி., பொருளாளராக டாக்டர் உமா வைத்தியநாதன் ஆகியோர் பதவி ஏற்றனர்.


மூத்த மருத்துவ நிபுணர்களான டாக்டர் மதுரி பட்டேல், டாக்டர் ராஜஸ்ரீ பலாடி மற்றும் டாக்டர் கே.யு. குஞ்சிமொய்தீன் ஆகியோர் புதிய நிர்வாகிகளை பதவி ஏற்பு செய்து வைத்தனர்.


இதனைத் தொடர்ந்து நடைபெற்ற அறிவியல் அமர்வில் பிசிஓஎஸ் குறித்த சமீபத்திய தகவல்கள், மரியாதைமிக்க மகப்பேறு பராமரிப்பு மற்றும் கருப்பை நார் கட்டிகளால் ஏற்படும் அதிக மாதவிடாய் இரத்தப்போக்கின் மேலாண்மை குறித்த புதுமையான அணுகுமுறைகள் பற்றி விளக்கப்பட்டது

மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவர்களின் பெரும் பங்கேற்புடன் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

Post a Comment

0 Comments