// NEWS UPDATE *** அத்தியாவசிய பணியில் இருப்பவர்களுக்கான தபால் வாக்கு நடைமுறையில் 5 துறைகளை புதிதாக சேர்த்து தேர்தல் ஆணையம் உத்தரவு அரசு போக்குவரத்து கழகம், மின்சாரத்துறைகள், போக்குவரத்து காவல்துறை, சிறைத்துறை, தீயணைப்பு துறைகள் தபால் வாக்கு நடைமுறையில் கூடுதலாக சேர்ப்பு *** திருச்சியில் யுனிவர்சல் தவ்ஹீத் சார்பாக 2000த்திற்கும் மேற்பட்ட அனைத்து சமுதாய மக்களுக்கும் மதிய உணவாக பிரியாணி வழங்கி ரம்ஜான் கொண்டாட்டம்

திருச்சியில் யுனிவர்சல் தவ்ஹீத் சார்பாக 2000த்திற்கும் மேற்பட்ட அனைத்து சமுதாய மக்களுக்கும் மதிய உணவாக பிரியாணி வழங்கி ரம்ஜான் கொண்டாட்டம்

ரம்ஜானை முன்னிட்டு திருச்சி பீமநகர் பகுதியில் யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக மாநில தலைவர் பீமநகர் ரபீக் தலைமையில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடைபெற்றது. 

தொழுகை முடிந்து மாநில தலைவர் பீம நகர் ரபீக் கூறும்போது, இஸ்லாமியர்கள் 30 நாட்கள் கடுமையான நோன்பிருந்து தற்போது ரம்ஜான் பண்டிகை சிறப்பாக கொண்டாடிகிறார்கள். அந்த வகையில் திருச்சி பீமநகரில் நடைபெற்ற ரம்ஜான் சிறப்பு தொழுகையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர். மேலும் எங்களது அமைப்பின் சார்பில் குறைந்தபட்சம் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட அனைத்து சமுதாய மக்களுக்கும் மதிய உணவாக பிரியாணி அவர்கள் இல்லம் தேடி வழங்கப்பட்டது. அதாவது நாங்கள் உண்ணும் உணவே அனைத்து சமுதாய மக்களுக்கும் கடந்த பல ஆண்டுகளாக வழங்கி வருகி றோம். இதற்காக இறைவனுக்கும், அனைத்து சமுதாய மக்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்று யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் மாநிலத் தலைவர் பீமநகர் ரபீக் கூறினார்.

Post a Comment

0 Comments