// NEWS UPDATE *** அக்டோபர் 6 ஆம் தேதி மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் - தவெக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு மதுராந்தகம் தொகுதியில் தவெக சார்பில் மரகதம் குமரவேல் வேட்பாளராக அறிவிப்பு, தாராபுரம் தொகுதில் தவெக சார்பில் சத்தியபாமா வேட்பாளராக அறிவிப்பு பதவிகளை ராஜினாமா செய்த மரகதம் குமரவேல், சத்யபாமாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது *** திருச்சி திருவானைக்காவல் ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடந்த முப்பெரும் விழா:-

திருச்சி திருவானைக்காவல் ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடந்த முப்பெரும் விழா:-

திருச்சி மாவட்டம் திருவானைக்காவல் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 29 வது கல்லூரி ஆண்டுவிழா, விளையாட்டு விழா, கலைவிழா ஆகிய முப்பெரும்விழா இன்று கொண்டாடப்பட்டது. 

இவ்விழாவில் மேம்படுத்தப்பட்ட குளிர் சாதன வசதிகளுடன் கூடிய ஸ்ரீபாதுகா குளிர்மை அரங்கம் திறப்பு விழா நடைபெற்றது.  இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக மிசுஹோ வங்கி லிமிடெட், மும்பை நிறுவனத்தின் இந்திய இணைத் தலைவரும் மூத்த மேலாண்மை இயக்குநருமான பியூஷ் அகர்வால் மற்றும் முதன்மை நிதி அதிகாரி, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் லிமிடெட், மும்பை ஸ்ரீகாந்த் வெங்கடாச்சாரி, ஆகியோர்  கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் பதக்கங்கள் சான்றிதழ் வழங்கி கௌரவித்தனர். 

விழாவில் கல்லூரி செயலர் மற்றும் தாளாளர் வெங்கடேஷ்  கல்லூரி முதல்வர் டாக்டர். பிச்சைமணி,  கலைத்துறை ஒருங்கிணைப்பாளர் டாக்டர். பவ்ய ரூபா, உடற்கல்வித் துறை இயக்குநர் பிருந்தா மற்றும் பேராசிரியர்கள் மாணவ மாணவிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments