மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்களின் அறிவுறுத்தல் படி சட்டப்பேரவைத் தேர்தல் 2026 க்கான களப்பணிகளை தமிழகம் முழுவதும் மஜக வின் தொண்டர்கள் உற்சாகத்தோடு செயலாற்ற துவங்கியுள்ளனர்.
அதன் முதல் நிகழ்வாக திருச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட 9 சட்டமன்ற தொகுதிகளின் பொறுப்பாளர்களுக்கான சிறப்பு ஆலோசனைக் கூட்டம் மாவட்டச் செயலாளர் பாபு தலைமையில், அவைத் தலைவர் ராஜா முஹம்மது, மாவட்ட பொருளாளர் ஜமீர் பாஷா ஆகியோர் முன்னிலையில் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.
2. திருச்சி கிழக்கு : ஜமீர் பாஷா - 96779 01914
3. திருவரம்பூர் : தர்வேஸ் - 96776 68137
4. மணப்பாறை : பஷாரத் - 80728 51174
5. மண்ணச்சநல்லூர் : சதாம் - 95975 27247
6. ஸ்ரீரங்கம் : யாசர் ஷெரிப் - 80729 67636
7. லால்குடி : பரீத் @ இஸ்மத் உசேன் - 82485 00522
9. முசிறி : ஹபீப் ரஹ்மான் - 089733 97043
இக்கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
1️⃣ வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தல் 2026 ல் மஜக விற்கு ஒரு தொகுதியை ஒதுக்கி அங்கீகரித்திருக்கும் திராவிட மாடல் அரசின் நாயகர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களுக்கும், திமுக தலைமைக்கும் இக்கூட்டம் நன்றியை தெரிவிக்கின்றது.
2️⃣ தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகித்துள்ள அனைத்து கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்கள் மாபெரும் வெற்றி பெற அயராது உழைப்போம்.
3️⃣ திருச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட 9 சட்டமன்ற தொகுதிகளின் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொள்ளப்படும்.
4️⃣ திருச்சியில் திண்ணைப் பிரச்சாரம், வலைதளப் பிரச்சாரம், ஜமாத் சந்திப்புகள், இளைஞர்கள், மாணவர்கள் ஒருங்கிணைப்புகள் போன்றவைகள் நடத்துவது.
5️⃣ "மீண்டும் வேண்டும் திராவிட மாடல் அரசு" எனும் தலைப்பில் மஜக சார்பில் மக்கள் சந்திப்புகள் நடத்துவது.
இக்கூட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர் சிராஜூதீன், மருத்துவ சேவை அணி மாநில துணைச் செயலாளர் ஜமால், இளைஞர் அணி மத்திய மண்டல செயலாளர் பஷாரத், மாவட்ட துணைச் செயலாளர்கள் தர்வேஷ், யாசர் ஷெரிப் உள்ளிட்ட நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்துக் கொண்டனர்.








0 Comments