// NEWS UPDATE *** பள்ளியில் ஆசிரியை வெட்டிக்கொலை சேலம், ஓமலூர் அருகே கமலாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளி வளாகத்திற்குள் உள்ளே புகுந்து ஆசிரியை ஸ்ரீவித்யா வெட்டி படுகொலை குடும்ப பிரச்னை காரணமாக அவரது கணவர் விஜயமுருகனே வெட்டிக் கொலை செய்த‌தாக தகவல்; தப்பியோடிய அவரை போலீசார் தேடி வருகின்றன *** மக்களை ஏமாற்றும் வகையில் திமுகவினர் 8000 டோக்கன் விநியோகிப்பதை தேர்தல் ஆணையம் தடுத்து நிறுத்த வேண்டும் - பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமன் பேட்டி

மக்களை ஏமாற்றும் வகையில் திமுகவினர் 8000 டோக்கன் விநியோகிப்பதை தேர்தல் ஆணையம் தடுத்து நிறுத்த வேண்டும் - பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமன் பேட்டி

திருச்சியில் உள்ள பாஜக அலுவலகத்தில் மாநில செயலாளர் அஸ்வத்தாமன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் அதில் கூறுகையில்...



மக்கள் மத்தியில் முன்னணியில் வந்து கொண்டிருக்கிற தேசிய ஜனநாயக கூட்டணி சட்டமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றி பெறும் என கருத்துக்கணிப்பிலும் தெரியவரும்நிலையில், திமுக தனது நயவஞ்சக வேலையை காட்டத் தொடங்கியுள்ளனர். தமிழகம் முழுவதும் அவர்களது வாக்குறுதியில் 8000 ரூபாய் டோக்கன் வழங்கப்படும் என்ற தேர்தல்அறிவிப்பின்படி வீடுகளில் 8000 காண டோக்கனை விநியோகம் செய்துவருவதை தேர்தல் ஆணையம் தடுத்து நிறுத்தவேண்டும், 2024ம் ஆண்டு திருவண்ணாமலையில் அமைச்சர் ஏ.வ வேலு அவர்களால் தொடங்கிய இந்த டோக்கன் ஃபார்முலாவை தமிழக முழுவதும் செய்துவருகின்றனர், ஓட்டுக்கு 8000 ரூபாய் லஞ்சமாக வழங்குவது போன்று இந்த செயலில் ஈடுபடுபவர்களை போலீசார் கைது செய்ய வேண்டும், மக்களை ஏமாற்றும் இந்த செயலை திமுகவினர் இதனை கைவிடவேண்டும் என கேட்டுக்கொண்டார்இது போன்ற ஏமாற்று வேலைகளை மக்கள் நம்ப மாட்டார்கள், கோயமுத்தூர் பகுதிகளிலும் திருச்சி பொன்மலை பகுதிகளிலும் மற்றும் தமிழகம் முழுதும் எந்த தொகுதியில் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் இது போன்ற டோக்கன் வினியோகம் செய்யப்படுகிறது, இதுபோன்று விநியோகம் செய்தாலும் அதனை தடுத்து நிறுத்தப்பட வேண்டும். மக்கள் இதுபோன்று டோக்கனை திமுகவினர் கொடுத்தால் அதனை கிழித்து அவர்களது முகத்தில் எறியவேண்டும் என கேட்டுக்கொண்டார்.திருச்சியில் கஞ்சா போதை பொருள் பல்வேறு வடிவங்களில் விற்பனையாகி வருகிறது, ஐந்தாண்டு திமுக ஆட்சியில் கட்டுக்கடங்காமல் உள்ளது புதிதாக அமைய உள்ள அதிமுகவின் ஆட்சியில் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் போதை பொருளை கட்டுப்படுத்த தனிப்படை அமைத்து அதனைக் கட்டுப்படுத்தப்படும் என்ற தகவல் மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் உள்ளது, இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது, போதையால் பாதிக்கப்பட்ட இளைஞர்களுக்கு மறுவாழ் மையம் ஏற்படுத்த வேண்டும்.


ஏற்கனவே திமுக முன்னாள் அமைச்சர்கள் ரகுபதி, அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் துணை முதல்வர் போன்றோர் பிரச்சாரத்திற்கு செல்ல முடியாமல் விரட்டப்படுகின்றனர், இதனை பாஜகவினால் கையும் களவுமாக படித்து தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைப்போம் இந்த டோக்கன் வீடியோ குறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்படும் என தெரிவித்தார்


காவல்துறையினரின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை அராஜகங்கள் தொடர்ந்து வருகிறது, பதநீர் இறக்கும் தொழிலாளி துப்பாக்கியால் இரண்டு கால்கள் சுடப்பட்டுள்ளநிலையில், கள்ளக்குறிச்சி சம்பவத்தில் தொடர்புடைய கண்ணுகுட்டி என்ற திமுக நபர்தான் 66 பேர் மரணத்திற்கு காரணமானவர், கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்களின் நகத்தைக் கூட பிடுங்க முடியவில்லை. கள்ளச்சாராயம் கஞ்சா விற்பனை செய்பவர்களை விட்டு விடுகிறார்கள் ஆனால் தமிழகத்தில் கள் மட்டும் தான் போதைப்பொருளாக உள்ளது, தேர்தல் நேரத்தில் கூட இது போன்று அராஜகதனமாக காவல்துறையினர் செயல்படுகின்றனர் இதற்கு திமுகவின் ஸ்டாலின் தான் காரணம் என குற்றம்சாட்டினார், தேர்தல் ஆணையத்தால் பல அலுவலர்கள் மாற்றப்பட்டாலும், தமிழகத்தின் பல இடங்களில் உள்ள தேர்தல் அலுவலர்கள் மற்றும் இதர அலுவலர்கள் மாற்றப்படவேண்டும்.


திருச்சி மாவட்ட ஆட்சியர் திமுகவினருக்கு ஆதரவாக குறிப்பாக அமைச்சர் நேருவுக்கு ஆதரவாக தொடர்ந்து செயல்பட்டு வருகிறார், தேர்தல் ஆணையம் உடனடியாக அவரை மாற்றம் செய்திடவேண்டும் இதனை செயல்படுத்தும் என நம்புவதாகவும், நியாயமான தேர்தல் திருச்சியில் நடைபெற வேண்டும் என்றால் பாஜக சார்பில் தேர்தல் ஆணையத்திடம் மனு அளிக்க இருப்பதாகவும் தெரிவித்தார். 



Post a Comment

0 Comments