திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் தாலுக்கா கிராம வருவாய் எல்லைக்குட்பட்ட நம்பர் ஒன் டோல்கேட் பிரதான சாலை ஒழுங்குமுறை, எச்சரிக்கை, வழிகாட்டி மற்றும் தகவல் அடையாளங்கள் சிக்னல் அருகில் உள்ள டிராபிக் பூத் அடியில் பெயர், விலாசம் தெரியாத சுமார் 70 வயது மதிக்கத்தக்க ரோஸ் வெள்ளை அரக்கு கலர் போர்வையுடன் இருந்து மல்லாந்த நிலையில் ஆண் ஒருவர், தலைமுடி மற்றும் தாடியுடன் கூடிய நிலையில் கிடந்தார். தகவல் அறிந்து, திருச்சி மாவட்டம் கொள்ளிடம் சரக காவல் நிலைய காவலர்கள் சம்பவ இடம் சென்று அக்கம் பக்கம் உள்ள கடைகளில் உள்ளவர்களிடம் விசாரணை செய்ததில் மேற்படி நபர் கிடைக்கும் இடங்களில் உணவு வாங்கி உண்டு உறங்கி அப்பகுதியில் சுற்றி திரிபவர் என்றும் யார் என்ற விவரம் தெரியவில்லை விவரம் பெற்றனர். இறந்த நபர் உடல் உடற்கூராய்வு செய்யப்பட்ட நிலையில் உடலை யாரும் உரிமை கோரவில்லை. உரிமை கோரப்படாத உடலை நல்லடக்கம் செய்வதற்காக திருச்சி மாவட்டம் கொள்ளிடம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பழனியப்பன்
உரிமை கோரப்படாத ஆதரவற்ற அனாதை பிணங்களை நல்லடக்கம் செய்து வரும் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அரங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமாருக்கு தகவல் அளித்தார். தகவலின் அடிப்படையில் திருச்சி குழுமிக்கரை மயானத்தில் கொள்ளிடம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பழனியப்பன் மற்றும் முதல் நிலை காவலர் தம்புசாமி உள்ளிட்டோருடன் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் உரிமை கோரப்படாத உடலுக்கு உரிய மரியாதையுடன் இறுதி சடங்கு செய்து நல்லடக்கம் செய்தார்.

0 Comments