திருச்சி கிழக்கு தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் இனிகோ இருதயராஜ் வீதி வீதியாக சென்று உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.திருச்சி கிழக்கு தொகுதியில் திமுக சார்பில் இனிகோ இருதயராஜ் போட்டியிடுகிறார்.
இவர் திருச்சி கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் வீதி வீதியாக திறந்த வெளி வாகனத்தில் சென்று பொதுமக்களை சந்தித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் இன்று திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட துரைசாமிபுரம், காஜேபேட்டை ,கீழப்புதூர் , மல்லிகைபுரம் , அன்னைநகர், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திறந்த வேனில் வீதி வீதியாக சென்று பொது மக்களை சந்தித்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்கும் படி வாக்கு சேகரித்தார்.
இந்த பிரச்சாரத்தில் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்கும் படி துண்டு பிரசுரங்கள் பொது மக்களுடைய கொடுத்து பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.




0 Comments