// NEWS UPDATE *** தொழிலதிபர் வீரமணியின் நீதிமன்ற காவலை அக்டோபர் 9ம் தேதி வரை நீட்டித்து சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு. பாதுகாப்பு காரணங்களுக்காக புழல் சிறையில் இருந்து காணொலி மூலம் வீரமணி ஆஜர் *** திருச்சியில் அக்டோபர் 4 ஆம் தேதி மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி

திருச்சியில் அக்டோபர் 4 ஆம் தேதி மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி

DR.K.சாந்தா மார்பக புற்றுநோய் அறக்கட்டளை (SBCF) - திருச்சி மற்றும் DR.G.விஸ்வநாதன் மருத்துவமனை இணைந்து நடத்தும் மேம்மோரன் 2026 திருச்சி மக்களிடையே மார்பக புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் போட்டி நடைபெற உள்ளது.

21.1KM அரை மாரத்தான் & 5KM விழிப்புணர்வு (போட்டியற்ற) ஓட்டப் போட்டி 4TH அக்டோபர் 2026 டாக்டர் சாந்தா மார்பக புற்றுநோய் அறக்கட்டளை (SBCF) மற்றும் DR.G.விஸ்வநாதன் மருத்துவமனை இணைந்து வரும் அக்.4ம் தேதி நடைபெற உள்ளது.மார்பக புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தவும் மற்றும் ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் குணப்படுத்தலாம் என்ற விழிப்பு ணர்வை மக்களிடையே ஏற்படுத்த வேண்டும் என்பதனை நினைவில் கொண்டு இந்த நிகழ்ச்சியினை நடத்துகின்றனர்.


21.1KM அரை மாரத்தான் பேட்டி, DR.G.விஸ்வநாதன் மருத்துவமனை மாம்பழச் சாலையில் இருந்து காலை 5 மணியளவில் துவங்கும் இப்போட்டியை ஸ்ரீரங்கம் காவல்துறை துணை ஆணையர் சீதாராமன் கொடியசைத்து துவங்கி வைக்கிறார்.


5KM ஓட்ட போட்டியானது காலை 7.00 மணியளவில் தென்னுர் உழவர் சந்தையில் இருந்து மத்திய மண்டல ஐஜி பாலகிருஷ்ணன் கொடியசைத்து துவங்கி வைக்கிறார். 5KM போட்டியில் பங்கேற்கும் மாணவர்களுக்கும் முன்பதிவு இலவசம். போட்டி பரிசளிப்பு விழா ஜமால் முகமது கல்லூரியில் நடைபெற உள்ளது.


இந்நிகழ்ச்சியில் டாக்டர் காஜா நஷீமுதீன், திரைப்பட நடிகை ப்ரீத்தி முகுந்தன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். போட்டியின் மொத்த பரிசு தொகை ரூ.3,00,000 லட்சம். இந்த விழிப்புணர்வு ஓட்ட போட்டியை மக்களிடையே கொண்டு சென்று இந்த நோயினை ஒழிக்க மக்கள் அனைவரும் இதில் பங்கு பெற மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்து மாறு கேட்டு கொள்கின்றோம்.

Post a Comment

0 Comments