// NEWS UPDATE *** பள்ளியில் ஆசிரியை வெட்டிக்கொலை சேலம், ஓமலூர் அருகே கமலாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளி வளாகத்திற்குள் உள்ளே புகுந்து ஆசிரியை ஸ்ரீவித்யா வெட்டி படுகொலை குடும்ப பிரச்னை காரணமாக அவரது கணவர் விஜயமுருகனே வெட்டிக் கொலை செய்த‌தாக தகவல்; தப்பியோடிய அவரை போலீசார் தேடி வருகின்றன *** திருச்சி மேற்கு தொகுதி அமமுக வேட்பாளர் ராஜசேகரன் தீவிர பிரச்சாரம்

திருச்சி மேற்கு தொகுதி அமமுக வேட்பாளர் ராஜசேகரன் தீவிர பிரச்சாரம்

 நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் திருச்சி மேற்கு தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் ராஜசேகரன், வேட்பு மனு தாக்கல் செய்து தொகுதி முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு, கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களை சந்தித்து தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். 



அந்த வகையில் இன்று திருச்சி புத்தூர், உறையூர் ராமலிங்க நகர், அம்மன் நகர், மேட்டுத்தெரு, கல் நாயக்கன் தெரு,  பாண்டமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீதி வீதியாக சென்று, பொது மக்களிடம் தேர்தல் வாக்குறுதிகளை எடுத்துக்கூறி குக்கர் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டுமென தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். வேட்பாளர் ராஜசேகரனுக்கு செல்லும் இடங்களில் எல்லாம் பொதுமக்கள் ஆரத்தி எடுத்து, மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். 


இந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது அமமுக தெற்கு மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் மற்றும்  தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி மாவட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டு, வேட்பாளர் ராஜசேகரனுக்கு ஆதரவாக குக்கர் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.

Post a Comment

0 Comments