// NEWS UPDATE *** "பொதுக்குழுவை கூட்ட சிவிஎஸ் தரப்பு தொடர்ந்து வலியுறுத்தல். பொதுக்குழுவை கூட்ட கோரினால் கையெழுத்திட வேண்டாம்" தனது ஆதரவாளர்களுக்கு ஈபிஎஸ் அறிவுறுத்தல் *** இலவச நூலகம் நடத்திவரும் குடும்பத்தினருக்கு யாழி உலக சாதனைப் புத்தகம் சார்பில் விருது!

இலவச நூலகம் நடத்திவரும் குடும்பத்தினருக்கு யாழி உலக சாதனைப் புத்தகம் சார்பில் விருது!

யாழி உலக சாதனைப் புத்தகம் சார்பில் தமிழ் மொழி, கலாச்சாரம் மற்றும் மரபுகளைப் பேணிக்காக்கும் உன்னத நோக்கத்துடன், கடந்த 25 ஆண்டுகளாக  அறிவார்ந்த சமூகத்தை உருவாக்க  இலவச நூலகத்தை நடத்தி, சமூகத்திற்கு  ஆற்றியுள்ள  சேவையை அங்கீகரிக்கும் விதமாக அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் பெ.விஜயகுமார் அவரது முயற்சிக்கு உறுதுணையாக இருக்கும் மனைவி மு.சித்ரா, மகள் வி.கீர்த்தனா உள்ளிட்டோர்க்கு ஏப்ரல் 23 உலக புத்தக தினத்தை முன்னிட்டு 

தமிழ் புத்தகத்தை சேகரித்து, மொழி, கலாச்சாரம் , பண்பாட்டை வளர்ப்பதிலும், வருங்காலத் தலைமுறையினருக்கு உத்வேகம் அளிக்கும்  வகையில் சமூகத்திற்கு  ஆற்றியுள்ள பங்களிப்பைப் பாராட்டி, "அறிவுச் சுடர் விருதினை யாழி புக் ஆஃப் வேல்ர்டு ரெக்கார்ட்ஸ் பிரைவேட் லிமிடெட்  தலைமை நிர்வாக அலுவலர் ர.ரீனா சான்றிதழை வழங்கி கௌரவித்தார்.

இது குறித்து அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் பெ.விஜயகுமார் பேசுகையில்,

தமிழைக் காக்க வேண்டுமென்றால் தமிழ் நூல்களைக் காக்க வேண்டும், அவை தமிழறிஞர்களுக்குப் பயன்பட வேண்டும், அதன் மூலம் தமிழ் வளர்க்கவேண்டும். தமிழில் எத்தனையோ அரிய நூல்களைப் பாதுகாக்க இயலாமல் இழந்திருக்கிறோம் அந்த இழப்பு எந்த வகையிலும் ஈடு செய்ய முடியாதது. அதை உணர்ந்தே என் காலத்தில் நூல்களைக் காப்பதற்கென்றே தனி கவனம் எடுத்துக்கொண்டேன். அவ்வாறு காப்பதன் மூலம் தமிழ் மொழியையும் அதில் உள்ள செறிவான சிந்தனைகளையும் எதிர்காலத் தமிழர்களுக்கு எடுத்துச் செல்ல முடியும் என்ற இலக்குடன் இலவச நூலகம் அமைக்கப்பட்டுள்ளது என்றார்.

Post a Comment

0 Comments