// NEWS UPDATE *** "பொதுக்குழுவை கூட்ட சிவிஎஸ் தரப்பு தொடர்ந்து வலியுறுத்தல். பொதுக்குழுவை கூட்ட கோரினால் கையெழுத்திட வேண்டாம்" தனது ஆதரவாளர்களுக்கு ஈபிஎஸ் அறிவுறுத்தல் *** ஆதரவற்ற பிரேதங்களை நல்லடக்கம் செய்பவர்க்கு சமூகப் பற்றாளர் விருது வழங்கிய திருச்சித் திருக்குறள் பேரவை!

ஆதரவற்ற பிரேதங்களை நல்லடக்கம் செய்பவர்க்கு சமூகப் பற்றாளர் விருது வழங்கிய திருச்சித் திருக்குறள் பேரவை!

 திருச்சித் திருக்குறள் பேரவை ஆண்டு விழா மற்றும் விருது வழங்கும் விழா திருச்சிராப்பள்ளி தமிழ்ச் சங்கக் கூட்ட அரங்கில் நடைபெற்றது. திருச்சித் திருக்குறள் பேரவை செயலர் முனைவர் அ.சையத் ஜாகீர் அசன் வரவேற்றார். தலைவர் நல்லாசிரியர் பு.வெ. தேவராஜ் தலைமை உரையாற்றினார். வானொலி நிலைய மேனாள் இயக்குனர் முனைவர் சுந்தர ஆவுடையப்பன் எப்போதும் வள்ளுவம் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்.பொறிஞர். லெ.நா. லெட்சுமணன் பணிக்கு தமிழ் இசை புரவலர்,ஜி.வி.குப்தா பணிக்கு திருப்பணி வள்ளல், முனைவர் க.திலகவதி பணிக்கு இலக்கியப் புரவலர், நல்லாசிரியர் இரா.வரதராசன் பணிக்கு குறள் நெறிச்செம்மல், புலவர் க.மாரிமுத்து பணிக்கு திருக்குறள் புலமையர் விருது வழங்கப்பட்டது.

அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் பெ.விஜயகுமார் உரிமை கோரப்படாத ஆதரவற்ற அனாதை பிணங்களை நல்லடக்கம் செய்யும் மனிதநேயப் பணியினை பாராட்டி சமூக பற்றாளர் விருதினை வழங்கினர். விருது பெற்ற யோகா ஆசிரியர் பெ.விஜயகுமார் பேசுகையில், காக்கப்பட வேண்டியவர்களால் கைவிடப்பட்டு வீடற்று மழை, வெயில், குளிர் என அனைத்து பருவ காலங்களிலும் யாசகம் பெற்று கிடைத்த இடத்தில் உண்டு, உறங்கி ஜீவனம் நடத்தி முதுமை காரணமாகவோ, உடல் நலக்குறைவாலோ பொது இடங்களில் இறந்து விடுவார்கள். அந்நபர்கள் குறித்து சரக காவல்துறையினர் விசாரணை மேற்கொள்வார்கள். விசாரணையில், உற்றார், உறவினர், சுற்றத்தார் யாரும் இல்லை. உடலை யாரும் உரிமைக் கோராத நிலையில் காவல் துறையினர் தரும் தகவலின் அடிப்படையில், காவலர்கள் முன்னிலையில் உரிமை கோரப்படாத உடலுக்கு உரிய மரியாதையுடன் இறுதி சடங்கு செய்து நல்லடக்கம் செய்து வருகிறோம் என்றார். இணைச்செயலாளர் முனைவர் உ.ஆரோக்கியசாமி நன்றி உரையாற்றினார். நல்லாசிரியர் 

மா. தமிழரசி, சிவநெறிச்செல்வர் பா.எழில் செல்வன் உள்ளிட்டோர் இணைப்புரையாற்றினர். திருச்சித் திருக்குறள் பேரவைப் பொறுப்பாளர்கள், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஆட்சி மன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

Post a Comment

0 Comments