// NEWS UPDATE *** கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கிய அரசுப்பணி ரத்து - -உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு *** த.வெ.கவில் இணைந்தார் திருச்சி தெற்கு மாவட்ட அமமுக முன்னாள் செயலாளர் செந்தில்நாதன்!

த.வெ.கவில் இணைந்தார் திருச்சி தெற்கு மாவட்ட அமமுக முன்னாள் செயலாளர் செந்தில்நாதன்!

திருச்சி மாநகராட்சி 47-வது வார்டு அமமுக கவுன்சிலராகவும், திருச்சி தெற்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழக செயலாளராகவும் பொறுப்பு வகித்தவர் ப.செந்தில்நாதன். ஓய்வுபெற்ற டிஎஸ்பி பஞ்சநாதனின் மகனான இவர், முன்னாள் தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இணைந்து செயல்பட்டு வந்தார்.

 இந்நிலையில், தலைமையின் மீது ஏற்பட்ட அதிருப்தியின் காரணமாக, 5 பக்கங்கள் கொண்ட விளக்க கடிதம் எழுதி சமீபத்தில் தனது மாவட்ட செயலாளர் பொறுப்பை ராஜினாமா செய்தார். இந்நிலையில், தமிழக வெற்றி கழக பொதுச் செயலாளரும், அமைச்சருமான புஸ்ஸி ஆனந்த் முன்னிலையில் தனது ஆதரவாளர்களுடன் இன்று (ஜூன் 13) த.வெ.கவில் இணைந்தார்‌


இவருடன்திருச்சி தெற்கு மாவட்ட அமமுகவில் பணியாற்றிய 11 பகுதி, ஒன்றிய செயலாளர்கள், 13 அணி செயலாளர்கள், 31 வட்ட செயலாளர்கள்களும் த.வெ.கவில் இணைந்தனர்.

Post a Comment

0 Comments