// NEWS UPDATE *** கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கிய அரசுப்பணி ரத்து - -உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு *** நீரிழிவு நோய் பரிசோதனை மற்றும் இயற்கை மருத்துவ ஆலோசனை முகாம்

நீரிழிவு நோய் பரிசோதனை மற்றும் இயற்கை மருத்துவ ஆலோசனை முகாம்

திருச்சிராப்பள்ளி ராயல் லயன்ஸ் சங்கம் திருச்சிராப்பள்ளி மலைக்கோட்டை ராயல் லயன்ஸ் சங்கம் லயன்ஸ் கிளப் ஆப் திருச்சிராப்பள்ளி விஷன், ஸ்ரீ சக்ரா இயற்கை யோகா அக்குபஞ்சர் மருத்துவமனையுடன் இணைந்து நீரிழிவு பரிசோதனை மற்றும் இயற்கை மருத்துவ ஆலோசனை முகாமினை  திருச்சியில் நடத்தியது. 

மாவட்டத் தலைவர் பிரசன்ன வெங்கடேசன் வரவேற்றார்.திருச்சிராப்பள்ளி ராயல் லயன்ஸ் சங்கத் தலைவர் லயன் ஜே. சில்வியா நெப்போலியன் தலைமை வகித்தார்.மாவட்ட ஆளுநர் லயன் விஜயலட்சுமி சண்முகவேல், இலவச மருத்துவ முகாமினை துவக்கி வைத்தார்.உறுப்பினர் வளர்ச்சி குழுத் தலைவர் லயன் ரவி,விரிவாக்க சங்க மாவட்ட தலைவர் செந்தில்குமரன், மாவட்ட அமைச்சரவை செயலாளர் சசிதரன், மாவட்ட பொருளாளர் எழிலரசி ரவி, மாவட்ட நிர்வாக அலுவலர் ராஜேந்திரன், மாவட்ட நிதி அலுவலர் சௌந்தரபாண்டியன், மாவட்ட நிர்வாக அதிகாரி நடராஜன், சங்க வழிநடத்துதல் செயலாளர் சரவணபெருமாள், இலக்கு உந்துனர் சரவணகுமார், 

ஆளுநர் செயலர் சிவராமகிருஷ்ணன், மாவட்ட நிதி ஆலோசகர் ஜோசப், மண்டலத் தலைவர் முகமது சபி, லீடு டோனார் வையாபுரி, வட்டாரத் தலைவர் சரவணன், மாவட்ட அவை இணைச் செயலாளர் பொன்னுவேல், மாவட்ட இணைப் பொருளாளர் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர். திருச்சிராப்பள்ளி மலைக்கோட்டை ராயல் லயன்ஸ் சங்கம் தலைவர் ரகுபதி ராஜன், செயலாளர் சிவராமன், பொருளாளர் சூரிய நாராயணன்,திருச்சிராப்பள்ளி லயன்ஸ் கிளப் ஆஃப் விஷன் சங்கத்தின் தலைவர் ஹேமலதா, செயலர் விஜயகுமார், பொருளாளர் முகமது ஹயாஸ், துணைத் தலைவர் முனைவர் சங்கர், கணேசன், இயற்கை மருத்துவர் கௌதமன், ஹரி பிரசாத், மகேஸ்வரி, கிருஷ்ணகாந்த், உஷா கேசவன், சந்தானம் உள்ளிட்டோர்  பங்கேற்றனர். இயற்கை மருத்துவர் கெளதம் முகாமில் பங்கேற்று பேசுகையில்,நீரிழிவு நோய் என்பது இரத்தத்தில் சர்க்கரையின் அளவு  அதிகமாக இருக்கும் ஒரு வளர்சிதை மாற்றக் கோளாறாகும். இதை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து, சரியான உணவு, உடற்பயிற்சி மற்றும் மருத்துவரின் ஆலோசனையுடன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது மிகவும் முக்கியம். நீரிழிவு நோயைக் கண்டறியும்   பரிசோதனைகள் மூலம் மருத்துவர் நீரிழிவு நோய் உள்ளதா, அதன் கட்டுப்பாட்டு நிலை எப்படி உள்ளது என்பதைக் கணிக்க முடியும்.

இயற்கை மருத்துவம் மற்றும் வாழ்க்கை முறையில் மருத்துவர் பரிந்துரைத்த சிகிச்சை முறையுடன் தினமும் 30–45 நிமிடங்கள் நடைப்பயிற்சி அல்லது உடற்பயிற்சி.உடல் எடையை ஆரோக்கியமான அளவில் பராமரித்தல்.

சிறுதானியங்கள், காய்கறிகள், கீரைகள், பருப்புகள் மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவுகளைச் சேர்த்துக்கொள்ளுதல்.

இனிப்புப் பானங்கள், அதிக சர்க்கரை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளைக் குறைத்தல்.போதுமான தண்ணீர் அருந்துதல்.மனஅழுத்தத்தைக் குறைக்க யோகா, தியானம் மற்றும் மூச்சுப் பயிற்சிகளை மேற்கொள்ளுதல்.

போதுமான தூக்கம் (பொதுவாக 7–8 மணி நேரம்).புகைப்பிடித்தல் மற்றும் மதுபானத்தைத் தவிர்க்க வேண்டும் 

பார்வை, சிறுநீரகம், பாதங்கள் மற்றும் இதய ஆரோக்கியத்தை அவ்வப்போது பரிசோதித்துக்கொள்வது நல்லது.

"நீரிழிவை முன்கூட்டியே கண்டறிவோம்; ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சி மற்றும் மருத்துவ ஆலோசனையுடன் ஆரோக்கியமாக வாழ்வோம் என்றார். ஆண், பெண், குழந்தைகள், இளைஞர்கள், முதியவர்கள் என நூற்றுக்கணக்கான நபர்கள் சிகிச்சையில் பங்கேற்று பயனடைந்தனர்.

Post a Comment

0 Comments