// NEWS UPDATE *** “திமுகவின் நிலைப்பாடை தெரிந்துகொள்ளவே காங்கிரஸ் கட்சியின் அழுத்தத்தில் எம்.பி.க்கள் கூட்டத்தைக் கூட்டுகிறார் முதலமைச்சர் விஜய்” - அன்புமணி ராமதாஸ், பாமக தலைவர் *** திருச்சி சிந்தாமணி பகுதியில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தவெக சார்பில் இ சேவை மையம் திறப்பு

திருச்சி சிந்தாமணி பகுதியில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தவெக சார்பில் இ சேவை மையம் திறப்பு

தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் உத்தரவின்படி,தவெக  பொதுச்செயலாளரும் , ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் என்.ஆனந்த் அறிவுறுத்தலின் படி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் ஆலோசனையின்படி தெய்வ திருவாளர்கள்,வி.எல்.ஶ்ரீனிவாசன் & உறந்தை கலை நல்லாசியுடன் 

திருச்சி கிழக்கு தொகுதி பொறுப்பாளர் தர்கா சௌகத்  தலைமையில் நாகநாதர் மகேந்திரன்  சார்பாக பொதுமக்களுக்கு பயன்பெறும் வகையில் இலவச இ சேவை மையம் சிந்தாமணி பகுதிக்கு உட்பட்ட 12வது வட்டம் தாஜ் மஹால் பின்புறம் ராம மூர்த்தி நகரில் வெகு விமர்ச்சியாக திறக்கப்பட்டது...இந்த நிகழ்ச்சியில் தவெக  நிர்வாகிகள் முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், 



முன்னாள் துணை மேயர் சீனிவாசன், வெல்லமண்டி ஜவஹர்லால் நேரு, சிந்தாமணி முத்துக்குமார், முன்னாள் மாமன்ற உறுப்பினர் செந்தில் நாதன், முன்னாள் மாமன்ற உறுப்பினர் ஜெரால்ட் மில்டன், காந்தி மார்க்கெட் பகுதி செயலாளர் வரகனேரி கௌதமன்,பாலக்கரை பகுதி செயலாளர்  பாலக்கரை ரா.சி.சூர்யா, ஏர்போர்ட் வெள்ளைச்சாமி,




மலைக்கோட்டை பகுதி செயலாளர் சதீஷ்குமார், பாலக்கரை கிழக்கு பகுதி செயலாளர் சிவா, காந்தி மார்க்கெட் கிழக்கு பகுதி செயலாளர் டர்க்கிஷ், மலைக்கோட்டை கிழக்கு பகுதி செயலாளர் கணேஷ் குமார், சிந்தாமணி பகுதி செயலாளர் ஜீவானந்தம் மற்றும் மாவட்ட, பகுதி, வட்ட, சார்பு அணி நிர்வாகிகள், பூத் நிர்வாகிகளும், தவெக தோழர்களும்,  தோழிகளும் அனைவரும் திரளாக கலந்து கொண்டனர்...

Post a Comment

0 Comments