// NEWS UPDATE *** “திமுகவின் நிலைப்பாடை தெரிந்துகொள்ளவே காங்கிரஸ் கட்சியின் அழுத்தத்தில் எம்.பி.க்கள் கூட்டத்தைக் கூட்டுகிறார் முதலமைச்சர் விஜய்” - அன்புமணி ராமதாஸ், பாமக தலைவர் *** மழைநீர் சேமிப்பு திட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

மழைநீர் சேமிப்பு திட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

லயன்ஸ் கிளப் ஆப் திருச்சிராப்பள்ளி விஷன் சார்பில் மழைநீர் சேமிப்பு திட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது.லயன்ஸ் கிளப் ஆப் திருச்சிராப்பள்ளி விஷன் செயலர் விஜயகுமார் துவக்க உரையாற்றினார். தலைவர் ஹேமலதா தலைமை தாங்கினார்.

பொறியாளர் விக்னேஷ், இயற்கை மருத்துவர் கௌதம் முன்னிலை வகித்தனர். மழைநீர் சேமிப்பு திட்டம் குறித்து பொறியாளர் ராகவேந்திரன் பேசுகையில், சுற்றுச்சூழல் திட்டத்தில் மழைநீர் சேகரிப்பு அமைப்பு முக்கியமாகும். ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரையில் தென்மேற்கு பருவமழையும், அடுத்து, அக்டோபரில் துவங்கி டிசம்பர் வரையில் வட கிழக்கு பருவமழையும் பெய்வது வழக்கம்.பருவ மழையின் மூலம் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதோடு விவசாயம், குடிநீர் மற்றும் தொழிற்சாலைக்கான அனைத்து நீர் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடிகிறது.ஆனால், சமீப காலமாக, பருவமழை குறித்த காலத்தில் சரி வர பெய்யாததால் குறையும் நிலத்தடி நீர் மட்டம் மீண்டும் உயருவதில்லை. இதனால், இயற்கையில் கிடைக்கும் மழைநீரை சேமிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதை கருத்தில் கொண்டு, ஆறுகளின் குறுக்கே வெள்ள நீரை சேமிக்க தடுப்பணைகள் கட்டப்பட்டன. அத்துடன், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதற்காக தனியார் கட்டடங்கள் மற்றும் வீடுகள், அரசு அலுவலகங்களில் மழைநீர் சேகரிப்பு அமைப்பு உருவாக்க 2005ல் தமிழக அரசு உத்தரவிட்டது.இதன் காரணமாக அரசு அலுவலக கட்டடங்கள், தனியார் வீடுகள், நிறுவனங்களின் மேற்கூரையில் இருந்து குழாய்களை அமைத்து தண்ணீரை நிலத்தடியில் சேகரிக்க உறிஞ்சி குழிகள் அமைத்தனர். இதன் காரணமாக நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்தது. செயல்படாமல் இருந்த போர்வெல்கள் மழை நீர் சேகரிப்பு காரணமாக மீண்டும் நீர் சுரந்து செயல்பாட்டிற்கு வந்தது.வீடு மற்றும் வணிக வளாகம் கட்ட அனுமதி கொடுக்கும்போதே மழை நீர் சேகரிப்பு கட்டாயப்படுத்தப்பட்டது. அரசு அலுவலகங்களிலும் அமைக்கப்பட்டது. ஆனால், அவைகள் முறையாக செயல்பாட்டில் உள்ளதா என்றால் இல்லை.

எனவே, மழைநீரின் அவசியத்தை உணர்ந்து,  மழை நீர் சேகரிப்பு திட்டத்தை,  அனைவரும் நடைமுறைப்படுத்த ஆர்வம் காட்ட வேண்டும்.வீடுகள், அலுவலகங்கள் மட்டுமின்றி, பொது இடங்களிலும் மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.மக்களிடமும் மழைநீர் சேகரிப்பு குறித்து வர விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.வரும் அக்டோபரில் வடகிழக்கு பருவ மழை துவங்குவதற்கு முன்பாக, இப்பணியில் அனைவரும் தீவிரம் காட்ட வேண்டும்.

மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்க, வீட்டின் மேற்கூரையில் விழும் நீரை குழாய்கள் மூலம் கொண்டுவந்து, மணல் மற்றும் ஜல்லி கொண்ட வடிகட்டி வழியாக சுத்திகரித்து தொட்டியில் சேமிக்க வேண்டும் என்றார்.

Post a Comment

0 Comments