பசியை நீக்குவது மனித குலத்தின் மிகச்சிறந்த அறம் லயன்ஸ் கிளப் ஆப் திருச்சிராப்பள்ளி விஷன் சார்பில் பசிப்பிணி போக்கும் அன்னதானம் வழங்கும் செயல்திட்டம் திருச்சியில் நடைபெற்றது. வட்டார தலைவர் சரவணன், லயன்ஸ் கிளப் ஆப் திருச்சிராப்பள்ளி விஷன் சங்க சாசன செயலர் விஜயகுமார் உள்ளிட்டோர் அன்னதானம் வழங்கினர். இது குறித்து சங்க செயலர் விஜயகுமார் பேசுகையில்,
பசியை நீக்குவது மனித குலத்தின் மிகச்சிறந்த அறம் ஆகும். "உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர்" என்பது நமது மரபு. பசிப்பிணியைப் போக்குவது உடலுக்கும் உயிருக்கும் செய்யும் தொண்டு மட்டுமல்ல, சமுதாயத்தில் சமத்துவத்தை ஏற்படுத்தும் தார்மீகக்கடமையாகும். மனிதனின் அடிப்படைத் தேவைகளில் முதன்மையானது உணவு. உணவின்றி வாழும் எந்த உயிரும் நிலைபெற முடியாது.
மனிதன் வாழும் காலம் குறுகியது, ஆனால் அவன் செய்யும் அறம் அவனுக்குப் பின்னும் நிலைத்து நிற்கும். எனவே, நம்மால் இயன்றவரை எளியோருக்கு உணவு அளிப்போம் பசி இல்லாத உலகைப் படைப்பதே நாம் மனித குலத்திற்குச் செய்யும் மிகச்சிறந்த அறமாகும் என்றார்.

0 Comments