// NEWS UPDATE *** “திமுகவின் நிலைப்பாடை தெரிந்துகொள்ளவே காங்கிரஸ் கட்சியின் அழுத்தத்தில் எம்.பி.க்கள் கூட்டத்தைக் கூட்டுகிறார் முதலமைச்சர் விஜய்” - அன்புமணி ராமதாஸ், பாமக தலைவர் *** சுதந்திர தின விழாவில் காந்தி அஸ்தி மண்டபத்தில் மலர் தூவி மரியாதை செய்த லயன்ஸ் சங்கத்தினர்!

சுதந்திர தின விழாவில் காந்தி அஸ்தி மண்டபத்தில் மலர் தூவி மரியாதை செய்த லயன்ஸ் சங்கத்தினர்!

இந்தியாவின் 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, திருச்சி புத்தூர் பகுதியில் அமைந்துள்ள மகாத்மா காந்தி அஸ்தி மண்டபத்தில் லயன்ஸ் கிளப் ஆப் திருச்சிராப்பள்ளி விஷன் சங்கத்தினர் மரியாதை செலுத்தினர்.

சத்தியம், அகிம்சை, எளிமை, ஒற்றுமை, சமூக நல்லிணக்கம் ஆகியவற்றை தனது வாழ்வின் அடிப்படைக் கொள்கைகளாகக் கொண்டு, இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் மக்களை ஒன்றிணைத்த தேசப்பிதா மகாத்மா காந்தியின் அஸ்தி மண்டபத்தில்  மகாத்மா காந்தியின் தியாகத்தையும் அகிம்சை வழியையும் நினைவுக் கூறி மரியாதை செலுத்தினர். நிகழ்வில் வட்டார தலைவர் சரவணன், லயன்ஸ் கிளப் ஆஃப் திருச்சிராப்பள்ளி விஷன் தலைவர் ஹேமலதா, செயலர் யோகா ஆசிரியர் விஜயகுமார், சுதாகர் உட்பட பலர் பங்கேற்றனர்.

Post a Comment

0 Comments